ஒரே மெசேஜால் பதறிப் போன விஜய்.. அமெரிக்காவில் தளபதி எடுத்த சிகிச்சை

Actor Vijay: நிற்காமல் ஓடிக்கொண்டே போகணும் என்பதற்கு ஏற்ப லியோ படத்தை முடித்த கையோடு விஜய் அவருடைய அடுத்த படமான தளபதி 68 படத்திற்கான பணியில் முழு முயற்சியாக இறங்கிவிட்டார். இதற்கிடையில் கடந்த இரண்டு நாட்களாக சமூக வலைதளங்களில் விஜய் அவருடைய அப்பா அம்மா உடன் சேர்ந்து இருக்கும் புகைப்படம் வெளியாகி வைரலாகி கொண்டு வருகிறது.

அதில் இருக்கும் விஜய்யை பார்ப்பதற்கு அச்சு அசலாக பிரியமுடன், துள்ளாத மனமும் துள்ளும் படத்தில் பார்த்தது போலவே இருக்கிறார். அதனால் சிலர் இது பழைய போட்டோ மாதிரி இருக்கிறது என்று கூறினார்கள். ஆனால் இது விஜய்யின் தளபதி 68 படத்திற்கான முயற்சியில் தான் இப்படி தன்னுடைய உடம்பை வருத்திக் கொள்ளும் அளவிற்கு சிகிச்சை எடுத்திருக்கிறார்.

அதற்காக இளம் வயது விஜய்யாக மாற வேண்டும் என்பதற்காக அமெரிக்காவில் இருக்கும் லாஸ் ஏஞ்சல்ஸ்-க்கு சென்று VFX டெக்னாலஜி பயன்படுத்தி சிகிச்சை மேற்கொண்டார். இந்த சமயத்தில் தான் எஸ்ஏ சந்திரசேகருக்கு நெஞ்சுவலி காரணமாக ஆபரேஷன் செய்யப்பட்டது. அப்பொழுது என்னதான் கோபமாக இருந்தாலும் தந்தை இந்த நிலைமையில் இருக்கும் பொழுது கூட விஜய் அவரை போய் பார்க்கவில்லை என்ற பலரும் கருத்துக்களை தாறுமாறாக தெளித்து வந்தார்கள்.

இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக அப்பாவிடம் இருந்து வந்த ஒரே மெசேஜால் பதறிப் போயி தந்தையை பார்க்க போயிருக்கிறார். அப்பொழுது தான் அம்மா அப்பா உடன் சேர்ந்து விஜய் இருப்பது போல் புகைப்படம் எடுக்கப்பட்டிருக்கிறது. என்னதான் மனக்கசப்பு என் அப்பாவிடம் இருந்தாலும் ஒரு சிறந்த மகனாக எப்பொழுதும் இருப்பேன் என்று நிரூபித்துக் காட்டிவிட்டார்.

ஆனால் தளபதி 68 படத்திற்காக வைக்கப்பட்ட சீக்ரெட் தற்போது கொஞ்சம் லீக் ஆகிவிட்டது. இதுவரை வெளியில் தலைகாட்டாமல் சீக்ரட்டாக இருந்த விஜய் அப்பாவின் உடம்புக்கு பிரச்சினை என்றதும் எல்லாத்தையும் மறந்து விட்டு ஓடோடி மருத்துவமனைக்கு சென்று இருக்கிறார். அப்பொழுது அங்கே எடுத்த போட்டோ வெளியானதால் தற்போது வைரலாகி கொண்டு வருகிறது.

அதே நேரத்தில் ரசிகர்களும் விஜய்யின் இந்த தோற்றத்தை பார்த்துவிட்டு மிகவும் சந்தோஷத்தில் இருக்கிறார்கள். இளம் வயது விஜய்யை பார்த்த திருப்தியும், படத்தின் மீது எதிர்பார்ப்பும் ரொம்பவே அதிகரித்து விட்டது. வயசானாலும் அழகும் ஸ்டைலும் உன்னை விட்டுப் போகாது என்று சொல்வதற்கு ஏற்ப அத்தனை அம்சங்களும் விஜய் இடம் கொட்டி கிடைக்கிறது என ரசிகர்கள் சந்தோஷத்தை கொண்டாடி வருகிறார்கள்.