புதன்கிழமை, ஜனவரி 15, 2025

கதைக்காக ஓடிய விஷாலின் 5 படங்கள்.. டெக்னாலஜி மோசடியை வெளுத்து வாங்கிய ராணுவ வீரன்

Vishal: விஷால் இதுவரை 35 திரைப்படங்கள் மட்டுமே நடித்துள்ளார். அதில் இவருக்கு வெற்றி படமாக அமைந்தது வெறும் பத்து படங்கள் மட்டுமே. அதுவும் கூட எதிர்பார்த்த அளவுக்கு மாபெரும் வெற்றி என கொண்டாடும் அளவுக்கு கிடையாது. சாதாரண வெற்றி தான், அப்படி வெற்றி பெற்ற இவரின் 10 திரைப்படங்கள் பார்ப்போம்.

செல்லமே: 2004 காந்தி கிருஷ்ணன் இயக்கத்தில் ரீமாசென் கூட்டணியில் வெளியான செல்லமே திரைப்படத்தின் மூலம் அறிமுகமானர். முதல் படத்திலேயே இன்கம் டேக்ஸ் இன்ஸ்பெக்டர் ஆக, மாஸ் என்ட்ரி கொடுத்திருப்பார். இது ஒரு ரொமான்டிக் திரில்லர் திரைப்படம் ஆகும். இத்திரைப்படத்தில் தனது மனைவி மைதிலியை கடத்திய பரத்திடமிருந்து எப்படி மீட்பார் என்பது கதையாகும். ஓரளவுக்கு நல்ல வெற்றி கிடைத்த திரைப்படம் ஆகும்.

சண்டக்கோழி: லிங்குசாமி இயக்கத்தில் 2005 இல் வெளியான சண்டக்கோழி திரைப்படம் இவரின் கேரியரில் மெகா ஹிட் திரைப்படம் ஆகும். இதில் மீரா ஜாஸ்மின், ராஜ்கிரண், கஞ்சா கருப்பு, சுமன் செட்டி போன்ற நடிகர்கள் நடித்துள்ளனர். திரைப்படம் சுமார் 200 நாட்கள் திரையரங்குகளில் ஓடியது. காதல் மற்றும் குடும்பம் சார்ந்த திரைப்படமாகும்.

Also Read:நயன்தாரா மார்க்கெட்டை வேறலெவலுக்கு கொண்டு போன 7 படங்கள்.. தெறிக்கவிட்ட பில்லா சாஷா

திமிரு: தருண் கோபி இயக்கத்தில் 2006 இல் ரீமாசென் கூட்டணியில் ஆக்சன் திரில்லர் திரைப்படமாக வெளியானது திமிரு. ஷ்ரேயா ரெட்டி இந்த திரைப்படத்தில் ஈஸ்வரி ஆக மரண மாஸ் ஆக நடித்திருப்பார். சாதுவாகவும் மறுபுறம் ஈஸ்வரிக்கு சவால் கொடுக்கும் அளவிற்கு தைரியமாகவும் நடித்திருப்பார். என்னதான் இந்த திரைப்படத்தில் விஷால் ஹீரோவாக, இருந்தாலும் ஈஸ்வரியை பார்ப்பதற்கே ரசிகர்கள் ஆவலோடு இருந்தார்கள்.

தாமிரபரணி: மாபெரும் வெற்றி திரைப்படம் ஆக இவருக்கு அமைந்தது ஹரி இயக்கத்தில் 2007 இல் வெளியான படம் தாமிரபரணி ஆகும். இதில் திருநெல்வேலி, தூத்துக்குடி போன்ற மாவட்டங்களில் பேசுவதைப் போல இவரும் திரைப்படத்தில் வசங்கள் பேசி பட்டைய கிளப்பி இருப்பார். இத்திரைப்படத்தில் குடும்பத்தில் நடக்கும் பிரச்சனைகளை நேர்த்தியாக வெளிக்கொண்டு வந்திருப்பார்கள்.

Also Read:தயாரிப்பாளர்கள் வழி தெரிந்த நடந்து கொள்ளும் அஜித்.. எல்லா படத்துக்கும் இதே நிலைமைதான்னா எப்படி பாஸ்

பாண்டியநாடு: சுசீந்திரன் இயக்கத்தில் 2013இல் லக்ஷ்மி மேனன் கூட்டணியில் வெளிவந்த திரைப்படம் பாண்டியநாடு. மதுரை மாவட்டத்தை கட்டி ஆண்டு கொண்டு இருக்கக்கூடிய ரவுடி அரசியல் பின்னணி உள்ள ஒரு தொழில் அதிபர். தன்னுடைய அண்ணனை கொலை பண்ணியதால் ஹீரோ எப்படி பழி வாங்கினார் என்பதே கதை. தமிழ் சினிமாவில் நூற்றுக்கணக்கான கதைகள் வந்திருந்தாலும், கதையை சொன்ன விதம்தான் இந்த படத்தோட வெற்றிக்கு காரணம்.

நான் சிகப்பு மனிதன்: திரு இயக்கத்தில் 2014 லக்ஷ்மி மேனன் கூட்டணியில் வெளியான திரைப்படம் நான் சிகப்பு மனிதன். அதிக சந்தோஷமோ, துக்கமோ பெரிய அதிர்ச்சியோ வந்தால் ஹீரோ உடனடியா மயக்கம் அடிச்சு கீழே விழுந்து, தூங்கி விடுவார். இந்த வியாதி இருக்கிறதுனாலேயே இவருக்கு வேலையும் கிடைக்காது , கல்யாணம் நடக்காது . இதனால் ஏற்படும் பின்விளைவுகளை மையமாக கொண்டு இந்த படம் எடுக்கப்பட்டது.

Also Read:மீண்டும் இயக்குனர் அவதாரம் எடுத்த லட்சுமி ராமகிருஷ்ணன்.. 2 தாயின் வலி, ஆர் யூ ஓகே பேபி ட்ரெய்லர் எப்படி இருக்கு?

பூஜை: ஹரி இயக்கத்தில் விஷால், ஸ்ருதிஹாசன் நடித்த திரைப்படம் பூஜை. வழக்கம்போல் ஹரி திரைப்படத்தில் வருவதை போல எக்கச்சக்க நபர்கள் இத்திரைப்படத்திலும் இருக்கின்றனர். இது ஒரு குடும்பம் சார்ந்த திரைப்படம் ஆகும். தனது பெரியப்பாவை அடித்ததற்கு ஹீரோ பழி வாங்குவது, மற்றும் காதலில் ஜெயிப்பதும் கதையாகும்.

மருது: முத்தையா இயக்கத்தில் 2016 இல் விஷால், ஸ்ரீதிவ்யா கூட்டணியில் வெளிவந்த திரைப்படம் மருது. வில்லனுக்கும் ஹீரோக்கும் பெருசா ஒன்னும் பிரச்சனை எல்லாம் கிடையாது. ஆனால் ஹீரோ லவ் பண்ற ஹீரோயின்க்கும் அந்த வில்லனுக்கும் ஏற்கனவே ஒரு பஞ்சாயத்து இருந்தது, அந்த பஞ்சாயத்தை ஹீரோ கைல எடுத்து இருப்பார்.அதன் பிறகு என்ன ஆச்சு என்பதே இந்த படத்தோட கதை.

Also Read:ஊருக்கு தான் துறவி வேஷம் போடும் ரஜினி.. கலாநிதி மாறனால் அல்லோல்படும் லைக்கா

துப்பறிவாளன்: மிஷ்கின் இயக்கத்தில் 2017 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் துப்பறிவாளன். திரைப்படத்தில் டிடெக்டிவ் ஏஜெண்டாக விஷால் நடித்திருப்பார். திரைப்படத்தில் அமைந்த சண்டை காட்சிகள் மிக அருமையாக இருக்கும்.

இரும்புத்திரை: மித்ரன் இயக்கத்தில் 2018 ஆக்ஷன் திரில்லர் திரைப்படமாக விஷால்,
சமந்தா கூட்டணியில் வெளியான திரைப்படம் இரும்புத்திரை. இந்த டிஜிட்டல் உலகத்துல எவ்வளவு வசதிகள் அனுபவிச்சிட்டு இருக்கோம், எல்லாம் விஷயத்தையும் ஆன்லைன்ல முடிச்சிடறோம். குறிப்பா ட்ரெயின் டிக்கெட், சினிமா டிக்கெட் கூட ஆன்லைன்லயே எடுககின்றோம். டிஜிட்டல் உலகில் நடக்கும் மோசடி பற்றி விஷால் ராணுவ வீரனாக அம்பலப்படுத்திய மாபெரும் மெகா ஹிட் திரைப்படம் ஆகும்.

Trending News