பாக்யாவை சிக்கலில் மாட்டிவிட்ட கோபி.. கரடி மூஞ்சி வாயனுக்கு என்ன ஒரு ஆனந்தம்

Baakhiyalakshmi Serial: விஜய் டிவியில் தொடர்ந்து பல பிரச்சனைகளுடன் ஒளிபரப்பாகி வருகிறது பாக்கியலட்சுமி தொடர். அதாவது தனது மகள் இனியாவின் ரோடு ட்ரிப்புக்காக பாக்யா, ஈஸ்வரி மற்றும் செல்வி ஆகியோருடன் சென்று இருக்கிறார். இதில் ஆரம்பத்தில் இருந்தே ஏதாவது ஒரு பிரச்சனை தொடர்ந்து வந்து கொண்டிருந்தது.

அந்த வகையில் திடீரென டிரைவர் தனது உடல் நிலையில் பிரச்சனை இருப்பதாக அழைப்பு வந்ததால் இவர்களை பாதியிலேயே விட்டுவிட்டு சென்றுவிட்டார். அதன் பிறகு பாக்யா தான் இப்போது காரை ஓட்டி சென்று கொண்டிருக்கிறார். இந்த சூழலில் எதிர்பாராத விதமாக சைக்கிளில் வந்த ஒரு நபர் பாக்யாவின் கார் முன்விட்டு விடுகிறார்.

இதனால் அங்கு போக்குவரத்து போலீஸ் கூடி பாக்யாவிடம் கேள்வி கேட்கிறார்கள். அந்த சமயத்தில் பாக்யாவிடம் லைசன்ஸ் இல்லை. இதனால் வீட்டிலேயே மறந்து வைத்துவிட்டு வந்ததால் அமிர்தாவிடம் போன் செய்து போட்டோ எடுத்து அனுப்ப சொல்கிறார். அமிர்தா அந்தச் சமயத்தில் கேண்டினில் இருந்த நிலையில் இந்த போன் வருகிறது.

இதனால் தாத்தா மற்றும் அமிர்தா இருவரும் வீட்டுக்கு கிளம்புகிறார்கள். இந்த விஷயம் கோபிக்கு தெரிய வர இவர்களுக்கு முன்னதாகவே பாக்யா வீட்டுக்கு சென்று லைசன்ஸை திருடிவிட்டு வருகிறார். பாக்யாவை இந்த பிரச்சினையில் கண்டிப்பாக சிக்க வைக்க வேண்டும் என்ற சூழ்ச்சியில் இவ்வாறு செய்து இருக்கிறார்.

அதன் பிறகு தாத்தா மற்றும் அமிர்தா இருவரும் வீட்டுக்கு வந்து லைசன்ஸ் தேடி பார்க்கும்போது காணவில்லை. இதனால் பாக்யா இன்னும் சிக்கலில் மாட்டிக் கொண்டிருக்கிறார். அந்த சமயத்தில் தனது நண்பருடன் கோபி ஒரு ஹோட்டலில் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறார். இந்த கரடி மூஞ்சி வாயனுக்கு இப்படி என்ன ஒரு ஆனந்தம் என்று அவரது நண்பர் யோசிக்கிறார்.

அப்போதுதான் பாக்யாவின் லைசன்ஸை கோபி எடுத்து வைத்திருக்கும் விஷயத்தை சொல்கிறார். மேலும் அதே ஹோட்டலில் பழனிச்சாமி எதிர்ச்சியாக வர இந்த விஷயங்கள் அனைத்தையும் தெரிந்து கொண்டிருக்கிறார். அதன் பிறகு கோபியிடம் இருந்து லைசன்ஸை வாங்கி பாக்யாவுக்கு அனுப்பி பிரச்சனையை சரி செய்ய உள்ளார்.

arun

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.

View all posts →