சனிக்கிழமை, ஜனவரி 18, 2025

ஓவர் அலப்பறையால் பரலோகம் போக பார்த்த TTF மஞ்சள் வீரன்.. குண்டு கட்டாக தூக்கி உள்ளே வைத்த போலீஸ்

TTF Vasan: யூடியூப் மூலம் பிரபலமான TTF வாசனை தெரியாதவர் யாரும் இருக்க முடியாது. சாகசம் செய்கிறேன் என்ற பெயரில் ஏதாவது ஒரு அலப்பறை செய்து வில்லங்கத்தை விலைக்கு வாங்காவிட்டால் அன்றைய நாளே அவருக்கு முடிவடையாது. அப்படித்தான் தற்போது அவர் ஆர்வக்கோளாறில் செய்த விஷயம் அவருக்கே ஆப்பாக முடிந்து விட்டது.

நேற்று இவருக்கு நடந்த விபத்து தான் ஒட்டுமொத்த மீடியாவையும் பரபரப்பாக்கியது. காஞ்சிபுரம் அருகே அதிவேகத்தில் பைக் வீலிங் செய்த இவர் எதிர்பாராத விபத்தில் சிக்கிக்கொண்டார். இதனால் படுகாயம் அடைந்த அவரை நண்பர்கள் அனைவரும் மீட்டு அருகில் இருக்கும் மருத்துவமனையில் சேர்த்தனர்.

Also read: டிடிஎப் வாசனுக்கு இவ்வளவு கோடி சம்பளமா.? ஒரே படத்தில் அடித்த சுக்கிர திசை

அது சம்பந்தப்பட்ட வீடியோ கூட வைரலான நிலையில் வாசனுக்கு மருத்துவ சிகிச்சையும் நடைபெற்றது. இது ஒரு புறம் இருந்தாலும் இப்படி ஏதாவது ஒரு பிரச்சனையை தொடர்ச்சியாக செய்து வரும் இவரின் மேல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஒட்டுமொத்த மக்களும் குமுறி வந்தனர்.

ஏனென்றால் இதற்கு முன்பே அவர் மிக வேகமாக பைக் ஓட்டி சர்ச்சையில் சிக்கியதோடு மட்டுமல்லாமல் சில வழக்குகளும் அவரின் மீது இருக்கிறது. இந்நிலையில் மீண்டும் அவர் இது போன்ற ஒரு ஏழரையை இழுத்து வைத்திருக்கிறார்.

Also read: அஸ்வின் போல ஆணவத்தில் ஆடும் யூடியூபர்.. முதல் படத்திற்கு ஓவர் பில்டப் கொடுக்கும் மஞ்சள் வீரன்

தற்போது அவர் மீது நாலா பக்கமும் எதிர்ப்புகள் கிளம்பிய நிலையில் போலீசார் வாசனை ஜாமீனில் வர முடியாத படி அதிரடியாக கைது செய்து இருக்கின்றனர். அது மட்டுமல்லாமல் மூன்று மாதங்களுக்கு அவரின் லைசென்ஸை ரத்து செய்ய வேண்டும் எனவும் தமிழக போக்குவரத்து ஆணையம் பரிந்துரைத்துள்ளது.

மேலும் வாசன் இப்போது மஞ்சள் வீரன் படத்தில் ஹீரோவாக நடித்து வரும் நிலையில் இப்படி ஒரு சம்பவம் பட குழுவினரையும் அதிர்ச்சி அடைய வைத்திருக்கிறது. ஆனாலும் ஓவர் சாகசம் செய்து பரலோகம் போக பார்த்த மஞ்சள் வீரனுக்கு இது தேவை தான்.

Also read: இந்த கொசு தொல்லை தாங்கல, ஆஸ்கர் விருதே வேண்டாம்.! கூச்ச நாச்சமே இல்லாமல் உருட்டும் மஞ்சள் வீரன் இயக்குனர்

Trending News