ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 22, 2024

பாஞ்சாலிக்கு 5 புருஷன் தான்.. ஆனா எனக்கு 15, மேடையிலேயே தைரியமாக போட்டுடைத்த அமலா பால்

Actress Amala Paul: சர்ச்சை ராணி என்ற பெயர் அமலாபாலுக்கு நன்றாகவே பொருந்தும். அப்படித்தான் அவரைச் சுற்றி நடக்கும் நிகழ்வுகள் ஒவ்வொன்றும் பூதாகரமாக வெடித்து மீடியாவையே கிடுகிடுக்க வைக்கும். அதில் தற்போது வெளியாகியிருக்கும் ஒரு விஷயம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்த சம்பவம் சில வருடங்களுக்கு முன்பு நடந்திருந்தாலும் திடீரென இப்போது சோஷியல் மீடியாவில் வைரலாகி கொண்டு இருக்கிறது. அதாவது கடந்த 2019 ஆம் ஆண்டு இவருடைய நடிப்பில் ஆடை என்ற படம் வெளியானது. அதில் ஒரு குறிப்பிட்ட காட்சியில் அமலாபால் ஆடை இல்லாமல் நடித்திருப்பார்.

Also read: வெப் சீரியஸ் நடிகை என முத்திரை குத்தப்பட்ட 5 நடிகைகள்.. வாய்ப்பு இல்லாமல் ஓடிடியில் தஞ்சம் அடைந்த அமலாபால்

இது குறித்து கதை சொல்லும் போதே அவருக்கு தெரிவிக்கப்பட்டு இருந்தாலும் அந்த நேரத்தில் நடிப்பதற்கு அவர் மிகவும் தயங்கி இருக்கிறார். அதனால் அந்த காட்சி படமாக்கப்படும் போது கேமராமேன் உட்பட முக்கியமான 15 ஆண்கள் மட்டும் அங்கு இருந்திருக்கின்றனர்.

இருந்தாலும் இத்தனை பேர் முன்னிலையில் ஆடை இல்லாமல் எப்படி நடிப்பது என்ற பயத்துடனே அமலாபால் அங்கு சென்று இருக்கிறார். அதை தொடர்ந்து அங்கே இருப்பவர்கள் அத்தனை பேரும் தன்னுடைய கணவர்கள் என்று நினைத்துக் கொண்டு அந்த காட்சியில் நடித்து முடித்தாராம்.

Also read: சொந்த ஊர்ல அசிங்கப்பட்ட அமலாபால்.. நம்ம ஊர்ல ராணிக்கு கிடைத்த மரியாதையால் ஒரே பூரிப்பு

இது குறித்து அப்படத்தின் இசை வெளியீட்டு விழா மேடையிலேயே வெளிப்படையாக அவர் தெரிவித்திருக்கிறார். அது மட்டுமல்லாமல் பாஞ்சாலிக்கு 5 புருஷன் தான். ஆனால் எனக்கு 15 என நினைத்துக் கொண்டுதான் நான் நடித்தேன் எனவும் அவர் ஒரு விளக்கம் கொடுத்துள்ளார்.

அந்த வீடியோ தான் இப்போது வேகமாக பரவி வருகிறது. ஏற்கனவே அவர் குறிப்பிட்ட அந்த காட்சியில் தைரியமாக நடித்ததற்கு பாராட்டுக்கள் குவிந்தது. அதை அடுத்து தற்போது அவர் தில்லாக இப்படி ஒரு விஷயத்தை கூறியிருப்பது ஆச்சரியத்தையும் கொடுத்துள்ளது.

Also read: அமலா பால் கேரியரை காலி பண்ணிய உச்ச நட்சத்திரம்.. கவர்ச்சி காட்டி அடுத்தடுத்த படங்களில் நடித்தும் பிரயோஜனமில்லை

Trending News