5வது நாளில் வசூல் வேட்டையாடிய விஷால்-S.J சூர்யா.. ஜவான் ஓரமா போங்க, ஆச்சரியப்படுத்திய மார்க் ஆண்டனி

Mark Antony Collectin Report: கடந்த சில வருடங்களாக தோல்வியை மட்டுமே பார்த்து வந்த விஷால் இப்போது மார்க் ஆண்டனியால் உச்சி குளிர்ந்து போயிருக்கிறார். சென்ற வாரம் வெளிவந்த இப்படம் ரசிகர்களின் ஆதரவுடன் இப்போது வெற்றி நடை போட்டு வருகிறது.

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் விஷாலுடன் எஸ் ஜே சூர்யா இணைந்து மிரட்டி இருக்கும் இப்படம் சயின்ஸ் சம்பந்தப்பட்ட கதையாக இருந்தாலும் நகைச்சுவை சரவெடியாக இருக்கிறது. அதனாலேயே இப்போது ரசிகர்கள் படத்தை திரும்பத் திரும்ப பார்த்து ரசித்துக் கொண்டிருக்கின்றனர்.

அந்த வகையில் வார இறுதி நாள், விநாயகர் சதுர்த்தி விடுமுறை நாள் என அடுத்தடுத்த நாட்களில் மார்க் ஆண்டனியின் கலெக்சன் பாக்ஸ் ஆபிஸை கலக்கியது. அதன்படி முதல் நான்கு நாட்களிலேயே இப்படம் 51 கோடி வரை வசூலித்து சாதனை படைத்தது.

அதையடுத்து நேற்று விடுமுறை இல்லாத நாளாக இருந்த போதிலும் திரையரங்குகளில் 75 சதவீத இருக்கைகள் நிறைந்து விட்டதாம். அந்த அளவுக்கு மார்க் ஆண்டனி ஒட்டு மொத்த ஆடியன்ஸையும் தன் பக்கம் கவர்ந்திருக்கிறது.

அந்த வகையில் ஐந்தாவது நாளான நேற்று படம் 4 கோடி வரை வசூலித்துள்ளது. அதன்படி இப்படத்தின் மொத்த வசூல் தற்போது 55 கோடியாக இருக்கிறது. இது அடுத்து வரும் நாட்களிலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஏனென்றால் இந்த வாரம் சொல்லிக் கொள்ளும் படியான பெரிய படங்கள் எதுவும் வெளியாகவில்லை. இதுவே மார்க் ஆண்டனிக்கு ஒரு பலமாக அமைந்துள்ளது. அந்த வகையில் இந்த வாரமும் திரையரங்குகளில் விஷால், எஸ் ஜே சூர்யாவின் ஆதிக்கம் தான் நிறைந்திருக்கும். அது மட்டுமல்லாமல் இப்படத்தால் ஜவான் வந்த சுவடு தெரியாமல் போயிருப்பது குறிப்பிடத்தக்கது.

vijay-founder-of-cinemapettai

Vijay

விஜய்- Cinemapettai நிறுவனர். 13 ஆண்டுகள் தமிழ் சினிமா செய்தி ஆசிரியர், டிஜிட்டல் மார்கெட்டிங் மற்றும் கன்டெண்ட் ஸ்ட்ராட்டஜியில் அனுபவம் கொண்டவர்.

View all posts →