வியாழக்கிழமை, டிசம்பர் 12, 2024

சில்க் மறைவிற்குப் பிறகும் வசூலை வாரி கொடுத்த 5 படங்கள்.. தியேட்டரை ஈ போல் மொய்த்த கூட்டங்கள்

Silk Smitha: ஒரு கவர்ச்சி நடிகை ரசிகர்களால் கொண்டாடப்பட்டார் என்றால் அது சில்க் ஸ்மிதா மட்டும்தான். இறந்து 27 வருடங்கள் ஆன பிறகு மீண்டும் ஒருவரால் ட்ரெண்டாக முடியும் என்றால் அந்த பெருமையும் சிலுக்கை தான் சேரும். சில்க் தற்கொலை செய்து கொண்டது எல்லோருக்கும் தெரிந்த விஷயம். அவர் இறந்த பிறகு இந்த ஐந்து படங்கள் ரிலீஸ் ஆகி இருக்கின்றன. தன்னுடைய அழகு மற்றும் கவர்ச்சியால் ரசிகர்களை கட்டிப்போட்ட சிலுக்கை கடைசியாக திரையில் பார்த்து விட வேண்டும் என்பதற்காக இந்த படங்களுக்கு மக்கள் கூட்டம் கூட்டமாக அலைமோதி கொண்டு வந்திருக்கிறார்கள்.

சமயக்கொண்டு சுல்லு: 1996 ஆம் ஆண்டு ரிலீசான படம் தான் சமயக் கொண்டு சுல்லு. இந்த படம் கன்னட மொழி திரைப்படமாகும் இதில் சில்க் ஸ்மிதா உடன் இணைந்து சரண்யா பொன்வண்ணன் மற்றும் டிஸ்கோ சாந்தி நடித்திருந்தார்கள் சில்கின் மார்க்கெட்டு குறைந்து கொண்டிருந்த நேரத்தில் அவருக்கு போட்டியாக சினிமாவில் கவர்ச்சி ஆட்டம் போட்டவர் தான் டிஸ்கோ சாந்தி.

Also Read:சில்க் கடித்த ஆப்பிளை ஏலம் விட்ட தயாரிப்பாளர்.. ஒரு கடிக்கு இவ்வளவு விலையா.?

மேரா தேஷ் : இயக்குனர் ஆர் வி உதயகுமார் இயக்கத்தில் அர்ஜுன் மற்றும் ரேவதி இணைந்து நடித்த சுபாஷ் என்ற திரைப்படம் தான் சில்க் கடைசியாக நடித்த படமாகும். இந்த படத்தை ஹிந்தியிலும் டப் செய்திருந்தார்கள். அங்கே இந்த படம் சிலுக்கிற்காகவே ரசிகர்களால் விரும்பி பார்க்கப்பட்டது.

ஹைவான்: ஹைவான் இந்தியில் ரிலீசான படமாகும். இந்த படத்தில் சிலுக்கு உடன் இணைந்து கௌதமி அனுராதா மற்றும் டிஸ்கோ சாந்தி ஆகியோர் நடித்திருந்தனர். இந்த படத்தின் மூலம் தான் அனுராதாவுக்கும் சிலுக்கிற்கும் நல்ல நட்பு ஏற்பட்டது. அவர் தற்கொலை செய்வதற்கு முன்பு கூட கடைசியாக அனுராதாவுக்கு தான் போன் செய்து நேரில் பார்க்க வேண்டும் என்று சொல்லியதாக கூட ஒரு பேட்டியில் சொல்லி இருப்பார் அனுராதா.

Also Read:அட இவங்க தான் சில்க்கின் ஜெராக்ஸ் காப்பி.. வைரலாகும் மார்க் ஆண்டனி பிரியாவின் புகைப்படங்கள்

ரேஷ்மா கி ஜவானி: ரேஷ்மா கி ஜவானி படம் ஹிந்தியில் ரிலீஸ் ஆன மற்றொரு சில்க் ஸ்மிதா நடித்த திரைப்படம் ஆகும். இந்த படத்தில் சிலுக்கு உடன் இணைந்து அபிலாஷ் மற்றும் பிந்துகோஷ் நடித்திருந்தனர். சிலுக்குக்காகவே இந்த படம் பெயர் பெற்றது.

பத்மாஷன்கா ராஜா: இயக்குனர் வேலு பிரபாகரன் இயக்கத்தில் ரோஜா மற்றும் ராம்கி நடித்த ராஜாளி படத்தின் ஹிந்தி ரீமேக் தான் பத்மாஷன்கா ராஜா. இந்த படத்திலும் கவர்ச்சியான கேரக்டரின் நடித்திருந்தார். சிலுக்கு இறந்து ஒரு வருடம் கழித்து இந்த படம் ரிலீஸ் ஆனது.

Also Read:90ஸ் பாடல்களை மீண்டும் தியேட்டரில் அலறவிட்ட 4 படங்கள்.. லோகேஷை ஃபாலோ பண்ணும் இயக்குனர்கள்

- Advertisement -

Trending News