சனிக்கிழமை, டிசம்பர் 14, 2024

இந்த சீசனில் விஜய் டிவி இறக்கிவிடும் வாரிசு.. மொத்த லிஸ்டையும் பார்த்தா டிஆர்பி-கே பஞ்சம் இருக்காது போலையே

Bigg Boss Season 7: ஊரு ரெண்டு பட்டா கூத்தாடிக்கு கொண்டாட்டம் என்ற பழமொழிக்கு ஏற்றது போல, நம்ம வாழ்க்கையில எவ்வளவு பிரச்சனை இருந்தாலும் அடுத்த வீட்டில் என்ன நடக்கிறது என்று தெரிந்து கொள்வதில் எப்போதுமே ஆர்வம் கொஞ்சம் அதிகம் இருக்கும். அந்த கான்செப்ட் வைத்து தான் பிக் பாஸ் நிகழ்ச்சி இத்தனை சீசன்களாக வெற்றியை பார்த்து வருகிறது.

ஒரு காதல் ஜோடி, ரெண்டு காமெடி பீஸ், வரிஞ்சு கட்டி சண்டை போட ஒரு சண்டக்கோழி என ஒவ்வொரு சீசனிலும் போட்டியாளர்களை இறக்கி டி ஆர் பியை அள்ளி வருகிறது விஜய் சேனல். 6 சீசன்களை வெற்றிகரமாக முடித்துவிட்டு, இப்போ ஏழாவது சீசன் வரும் அக்டோபர் ஒன்றாம் தேதி முதல் ஆரம்பிக்க இருக்கிறது. வழக்கம் போல ஆண்டவர் தான் இந்த நிகழ்ச்சிக்கும் தொகுப்பாளர்.

Also Read:கமலிடம் ரெண்டு நிபந்தனையை வைத்த மம்மூட்டி.. ஒரே கல்லில் இரண்டு மாங்காய்

செய்தி வாசிப்பாளர் ரஞ்சித், அன்பே ஆருயிரே பட நடிகை நிலா, வி.ஜே. பார்வதி, ரேகா நாயர், அம்மு அபிராமி, ஜாக்குலின், உமா ரியாஸ், ரவீனா தாஹா, மகாபா ஆனந்த், ஆகியோர் இந்த சீசனில் கலந்து கொள்ள இருக்கிறார்கள். மேலும் வனிதா விஜயகுமாரின் மகள் ஜோவிகாவும் இதில் கலந்து கொள்ள இருக்கிறார் என செய்திகள் வெளியாகி இருக்கிறது.

வனிதா விஜயகுமார் வரிசையில் விஜய் டிவி பிரபலம் ஒருவர் தன்னுடைய வாரிசை இந்த சீசனில் களம் இறக்கி இருக்கிறார். போற போக்க பாத்தா இந்த சீசன் பிக் பாஸ் வீடு ஒரு மினி காலேஜ் போல் இருக்கும் போல. டிக் டாக் மற்றும் இன்ஸ்டா ரில்ஸ் மூலம் பிரபலமானவர்தான் இந்திரஜா. இவர் பிரபல காமெடி நடிகர் ரோபோ சங்கரின் மகள்.

Also Read:ஆபத்தான ஆதி குணசேகரனாக வரும் பெருமாள் நடிகர்.. விட்ட டிஆர்பி-யை பிடிக்கும் எதிர்நீச்சல்

பிகில் மற்றும் விரும்பன் படத்தில் சப்போர்டிங் கேரக்டரில் நடித்த இவர் இந்த சீசனில் போட்டியாளராக கலந்து கொள்ள இருக்கிறார். நடிப்பு மட்டுமில்லாமல் இந்திரஜா சிறந்த நடன கலைஞரும் கூட. இந்த வருடம் தான் இவர் கல்லூரி படிப்பை முடித்து இருந்தார். விரைவில் இவருக்கு திருமணம் ஆக இருப்பதாக கூட சமூக வலைத்தளங்களில் செய்திகள் வெளியானது.

இந்திரஜா தன்னுடைய காதலரை ரசிகர்களுக்கு அறிமுகப்படுத்தி, இவருடன் தான் எனக்கு திருமணம் ஆனால் தேதியை பிறகு சொல்கிறோம் என்று சொல்லி இருந்தார். இவர் அடுத்த திருமணத்திற்கு தயாராகிக் கொண்டிருக்கிறார் என்று பார்த்தால், பிக் பாஸ் வீட்டுக்கு வருவதற்கு பஞ்சாயத்துக்காக ரெடியாகிக் கொண்டிருக்கிறார். ரோபோ சங்கர் போல் இவர் இருக்கும் இடம் கலகலப்பாக இருக்குமா, இல்லை புஸ்ஸுன்னு போய்விடுமா என நிகழ்ச்சி ஆரம்பித்தால் தான் தெரியும்.

Also Read:சமீபத்தில் சின்னத்திரையில் பட்டையை கிளப்பிய 5 பிரபலங்கள்.. மறைந்தாலும் மக்கள் மனதில் வாழும் ஆதி குணசேகரன்

- Advertisement -

Trending News