Ethirneechal Serial: பொதுவாக சீரியலில் ஒரு கேரக்டர் இல்லை என்றால் இவருக்கு பதில் இவர் என்று வேறு ஒரு நடிகரை கொண்டு வந்து விடுவார்கள். ஆனால் முதல்முறையாக எதிர்நீச்சல் சீரியலில் மட்டும் தான் குணசேகரனுக்கு பதிலாக இவர் என்று போட முடியாமல் மொத்த டீமும் தவியாக தவித்துக் கொண்டு வருகிறது.
முக்கியமாக குணசேகரன் இல்லாமல் இருப்பதால் கதையின் சுவாரஸ்யம் குறைந்து விடக்கூடாது என்ற விஷயத்தில் கண்ணும் கருத்துமாக இயக்குனர் ஒவ்வொரு காயும் நகர்த்திக் கொண்டு வருகிறார். அந்த வகையில் தற்போது ஜான்சி ராணி எல்லா வில்லங்கத்தனத்தையும் செய்து குணசேகரன் வீட்டு மருமகள்களை ஆட்டிப் படைக்க வந்திருக்கிறார்.
அத்துடன் இந்த வீட்டின் மொத்த ராஜ்ஜியமும் நம் கைக்கு மாறிவிட வேண்டும் என்று ஒவ்வொரு விஷயத்திலும் மூக்க நுழைகிறார். அதற்கு முதற்கட்டமாக அந்த வீட்டில் இருக்கும் அடுப்பாங்கரையில் நுழைந்து சமைக்க ஆரம்பித்து விட்டார். இதற்கு நந்தினி மற்றும் ரேணுகா எதிர்ப்பு தெரிவித்த நிலையில் ஜான்சி ராணி ஒரே போடாக உன் மாமியார் வந்து என்னிடம் சொல்லட்டும் அதன்பிறகு நான் கேட்கிறேன் என்று சொல்லிவிடுகிறார்.
உடனே ரேணுகா மற்றும் நந்தினி குணசேகரனின் அம்மாவிடம் ஜான்சி ராணி ரொம்பவே அட்டூழியம் பண்ணுகிறார் நீங்கள் கேட்கவே மாட்டீங்களா என்று சொல்கிறார். அதற்கு அவர் இப்ப ஜான்சி சமைச்சா என்ன, அவளும் ஒரு பொண்ணு தானே. இதுவரை நீங்கள் சமைச்சு சாப்பிட்டதெல்லாம் போதும் இனி அவளை சமைக்கட்டும் என்று ஜான்சி ராணிக்கு ஒத்து ஊதி பேசுகிறார்.
Also read: குணசேகரன் லெட்டர் எல்லாம் எழுதி வச்சிட்டு போற ஆளா.. கண்ணீரில் தத்தளிக்கும் எதிர்நீச்சல் குடும்பம்
அடுத்ததாக ஈஸ்வரி, குணசேகரனை கண்டுபிடிப்பதற்காக ஜீவானந்திடம் உதவி கேட்கிறார். அவரும் என்னால் முடிந்தவரை நான் உங்களுக்கு உதவி செய்கிறேன் குணசேகரனை எப்படியாவது தேடி கண்டுபிடித்துக் கொடுக்கிறேன் என்று சொல்கிறார். அதன் பிறகு வெண்பாவை நான் என்னுடன் வைத்துக் கொள்கிறேன் என்று ஈஸ்வரி,ஜீவானந்திடம் சொல்கிறார்.
அதற்கு அவர் உங்க வீட்ல உங்களுக்கு தேவையில்லாம பிரச்சனை வந்துவிடும் அதனால் வேண்டாம் என சொல்கிறார். ஆனால் ஈஸ்வரி அதெல்லாம் ஒரு பிரச்சனையும் ஆகாது நான் சமாளித்துக்கொள்கிறேன் என்கிறார். அடுத்தபடியாக ஜீவானந்தத்தின் மனைவி கயல்விழி இறப்பிற்கு காரணம் ஆதி குணசேகரன், கதிர் மற்றும் வளவன் தான் என்ற உண்மை கௌதமுக்கு தெரிந்து விடுகிறது. இதனால் அவர்களை பழிவாங்க கௌதம் கிளம்பி போகிறார்.
Also read: குணசேகரன் கேரக்டரை வள்ளலாக மாத்தி குளோஸ் செய்த எதிர்நீச்சல்.. மருமகள்களை ஆட்டிப் படைக்க வரும் அண்ணன்