எக்ஸ் புருஷனால் வெடிக்கப் போகும் பூகம்பம்.. இந்த கேவலத்துக்கு கோபி அங்கிள் எவ்வளவோ பரவாயில்லை

Baakhiyalakshmi Serial: விஜய் டிவியில் விறுவிறுப்பான திருப்புங்களுடன் பாக்கியலட்சுமி தொடர் இப்போது ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது. இந்த சூழலில் ரசிகர்கள் கழுவி ஊற்றும் அளவுக்கு மிக மோசமான முறையில் கதையை எடுத்துச் சென்று கொண்டிருக்கிறார்கள். அதாவது இந்த தொடரில் முக்கால்வாசி நபர்களுக்கு இரட்டை திருமணம் தான்.

கதையின் நாயகன் கோபி தொடங்கி ராதிகா, அமிர்தா என பலர் இரு திருமணம் செய்து கொண்டனர். போதாக்குறைக்கு கோபியின் மூத்த மகன் செழியனும் வேறு ஒரு பெண்ணுடன் பழகி வருகிறார். இந்த சூழலில் இறந்து விட்டதாக இதுவரை நினைத்துக் கொண்டிருந்த அமிர்தாவின் முன்னாள் கணவர் கணேஷ் உயிர்தப்பி வந்து விடுகிறார்.

அதுமட்டுமின்றி தனது மனைவி அமிர்தா மற்றும் குழந்தையை பார்க்க வேண்டும் என்று தனது அம்மா மற்றும் அப்பாவிடம் நச்சரித்துக் கொண்டிருக்கிறார். ஏற்கனவே அமிர்தாவுக்கு திருமணம் நடந்த விஷயம் கணேஷ்க்கு தெரிந்தால் என்னவாகும் என்று தெரியாமல் அவர்களது பெற்றோர் பதட்டத்தில் உள்ளனர்.

இந்த சூழலில் அமிர்தாவை தேடி சென்னைக்கு அவரது அம்மா வீட்டுக்கு கணேஷ் செல்கிறார். இவரைப் பார்த்தவுடன் அதிர்ச்சி அடைந்து அமிர்தாவின் அம்மாவுக்கு என்ன செய்வதென்றே தெரியாத நிலை ஏற்படுகிறது. மேலும் சாதுரியமாக அவரை வீட்டின் வெளியே வரச் செய்து கதவை சாத்தி விடுகிறார்.

வீட்டின் முன் நின்று கணேஷ், அமிர்தா எங்கே என்று கேட்டு கதறுகிறார். இதற்கு அடுத்ததாக கண்டிப்பாக அமிர்தா இருக்கும் இடத்திற்கு கணேஷ் செல்ல இருக்கிறார். அதன்பிறகு எழிலின் தலையில் இடியை இறக்கும் படியான சம்பவம் அரங்கேற இருக்கிறது. இதற்கு கோபியே எவ்வளவோ பரவாயில்லை என்பது போல தான் கதையை உருட்டி வருகிறார் இயக்குனர்.

அவராவது காலம் போன கடைசியில் தான் தனது மனைவி மற்றும் பிள்ளைகளை விட்டு ராதிகாவை தேடி சென்றார். ஆனால் வாழ வேண்டிய வயதில் எழிலின் வாழ்க்கையை நாசமாக்கி விடும் விதமாக இப்போது சம்பவங்கள் அரங்கேறி வருகிறது. இதனால் அடுத்தடுத்து என்ன நடக்குமோ என்ற எதிர்பார்ப்பில் ஒளிபரப்பாகி வருகிறது.