வியாழக்கிழமை, டிசம்பர் 12, 2024

ட்ரிம் செய்யப்பட்ட மீசை, தாடி.. விடாமுயற்சிக்காக ஸ்மார்ட்டாக மாறிய அஜித்தின் நியூ லுக்

Actor Ajith: அப்பாடா ஒரு வழியா விடாமுயற்சி தொடங்க போகுதுன்னு அஜித் ரசிகர்கள் பெருமூச்சு விட்டுக் கொண்டிருக்கின்றனர். இது ஒரு பக்கம் இருந்தாலும் இவங்கள நம்பலாமா வேண்டாமான்ற ஒரு சந்தேகமும் இருக்கத்தான் செய்கிறது.

ஆனா அப்படி ஒரு சந்தேகம் உங்களுக்கு வேண்டவே வேண்டாம் என்ற ரீதியில் அஜித் நியூ லுக்கில் ஸ்மார்ட்டா இருக்கும் போட்டோ ஒன்று சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அதில் அவர் வழக்கம் போல சால்ட் அண்ட் பெப்பர் ஹேர் ஸ்டைலில் இருக்கிறார்.

Also read: அட நம்புங்கப்பா உண்மை தான்.. விடாமுயற்சி ஷூட்டிங் எங்க, எப்ப ஆரம்பிக்குது தெரியுமா?

ஆனால் லேசாக ட்ரிம் செய்யப்பட்ட மீசை, தாடி, கோட் சூட் என அவர் ஸ்டைலாக இருப்பது ரசிகர்களை மிகவும் கவர்ந்துள்ளது. அந்த வகையில் தற்போது சென்னையில் உள்ள பிரபல ஹோட்டலுக்கு வருகை தந்துள்ள அஜித்தின் வீடியோ தான் ட்விட்டர் தளத்தில் வேகமாக ஷேர் செய்யப்பட்டு வருகிறது.

அதில் அவர் தனக்கே உரிய பாணியில் அமைதியாக வந்ததோடு மட்டுமல்லாமல் ரசிகர்களோடு இணைந்து போட்டோவும் எடுத்துக் கொண்டார். அதைப் பார்த்த அனைவரும் இதுதான் விடாமுயற்சிக்கான புது லுக்கா என கேள்வி எழுப்பி வருகின்றனர்.

Also read: ஒருவேளை விடாமுயற்சி அவர் விட்ட சாபமா இருக்குமோ!. அடுத்த கூட்டணியுடன் சூட்டிங்க்கு தயாரான விக்கி

அந்த வகையில் பல இழுப்பறிகளுக்குப் பிறகு தொடங்கப்பட இருக்கும் இப்படத்தின் ஷூட்டிங் துபாயில் இன்னும் சில வாரங்களில் நடைபெற இருக்கிறது. அதற்கான வேலைகளில் இருக்கும் படக்குழு விரைவில் அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட இருக்கின்றனர்.

ஆக மொத்தம் பைக்கிலேயே உலகத்தை சுற்றி வந்த அஜித் ஒரு வழியாக மேக்கப் போட தயாராகி விட்டார். அது மட்டுமல்லாமல் அவர் புது தோற்றத்தில் இருக்கும் இந்த போட்டோவும், வீடியோவும் ரசிகர்களின் ஆர்வத்தையும் தூண்டி இருக்கிறது.

ஸ்மார்ட்டாக மாறிய அஜித்தின் நியூ லுக்

ajith-latest-look
ajith-latest-look
- Advertisement -

Trending News