சனிக்கிழமை, டிசம்பர் 14, 2024

நானும் உறவில் இருக்கிறேன், ராஷ்மிகா முன்னாள் காதலனின் புகைப்படம்.. கடுப்பில் விஜய் தேவரகொண்டா

Actress Rashmika: ராஷ்மிகா மந்தனா இப்போது ரசிகர்களின் நேஷனல் கிரஷ் ஆக இருந்து வருகிறார். சமீபத்தில் அவருடைய அனிமல் படத்தின் போஸ்டர் வெளியாகி ஒட்டுமொத்த ரசிகர்களையும் கவர்ந்திருந்தது. அதாவது குடும்பப் பெண்ணாக புடவையில் கொள்ளை அழகுடன் ரஷ்மிகாவின் புகைப்படம் வெளியாகி இருந்தது.

இந்நிலையில் ராஷ்மிகா தமிழ் சினிமாவில் சுல்தான் படம் மூலம் அறிமுகமான நிலையில் அதன் பிறகு விஜய்க்கு ஜோடியாக வாரிசு படத்தில் நடித்திருந்தார். ஆனாலும் தமிழ் சினிமாவில் ராஷ்மிகா பெரிய அளவில் வரவேற்கப் படவில்லை. ஆனாலும் மற்ற மொழிகளில் ராஷ்மிகா இப்போது சக்கை போடு போட்டு வருகிறார்.

Also Read : ஹோம்லி லுக்கில் ஸ்கோர் செய்த நேஷனல் கிரஷ் ராஷ்மிகா.. காட்டுத்தீயாய் பரவும் அனிமல் பட போஸ்டர்

அதுவும் பாலிவுட்டில் இப்போது எக்கச்சக்க படங்கள் ராஷ்மிகா கைவசம் இருந்து வருகிறது. இந்நிலையில் ராஷ்மிகா மந்தனா மற்றும் விஜய் தேவரகொண்ட இருவரும் டேட்டிங் செய்து வருவதாக இணையத்தில் தகவல் வெளியானது. ஏனென்றால் இருவரும் ஒரே நேரத்தில் அடிக்கடி மாலத்தீவு செல்வதாக கூறப்பட்டு வந்தது.

அதோடு மட்டுமல்லாமல் இருவரும் ஒரே இடத்தில் இருக்கும் புகைப்படங்கள் வெளியாகி சந்தேகத்தை மேலும் அதிகப்படுத்தி இருந்தது. ஆனால் இதுகுறித்து ராஷ்மிகா மற்றும் விஜய் தேவரகொண்டா இருவரும் வெளிப்படையாக எதுவும் கூறவில்லை. இப்போது ராஷ்மிகாவின் முன்னாள் காதலர் கொடுத்திருக்கும் பேட்டி தான் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

Also Read : வசமாக சிக்கிய விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா.. ஆதாரத்தோடு வெளியான லிவிங் ரிலேஷன்ஷிப் போட்டோ

அதாவது ஒரே படத்தில் நடித்ததன் மூலம் ரக்ஷித் ஷெட்டி மற்றும் ராஷ்மிகா இருவரும் காதலித்தனர். மேலும் நிச்சயதார்த்தம் வரை சென்ற நிலையில் சில காரணங்களால் திருமணம் நடக்கவில்லை. அதன் பிறகு தான் ராஷ்மிகா சினிமாவில் மிகப்பெரிய வளர்ச்சி அடைந்தார். இந்த சூழலில் ரக்ஷித் ஷெட்டி இப்போதும் ராஷ்மிகாவுடன் நான் உறவில் இருப்பதாக கூறியிருக்கிறார்.

அதாவது தங்களது திரைப்படங்கள் வெளியாகும் போது நாங்கள் ஒருவருக்கொருவர் மெசேஜ் செய்து கொள்வோம். மேலும் ரஷ்மிகா தனது தொழிலில் பல கனவுகள் கொண்டிருக்கிறார். அதன் வெளிப்பாடாகத்தான் இப்போது நேஷனல் கிரஷ் ஆகி இருக்கிறார் என பெருமிதமாக கூறியிருக்கிறார். மேலும் அவர்கள் ஒன்றாக இருக்கும் புகைப்படமும் வெளியாகி இருக்கிறது. இதைப் பார்த்தால் விஜய் தேவரகொண்டா மிகுந்த கடுப்பாவார் என ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகிறார்கள்.

ராஷ்மிகா முன்னாள் காதலனின் புகைப்படம்

rashmika
rashmika

Also Read : 5 வருடத்திற்கு முன்பே சமாளித்த ரஜினி முன்பு தோத்துப்போன விஜய்.. என்னைக்கும் கழுகு கழுகு தான்

- Advertisement -

Trending News