வியாழக்கிழமை, டிசம்பர் 12, 2024

100 கோடிக்கு வீடு, ஜெட் விமானம்.. கிறுகிறுக்க வைக்கும் செல்வ சீமாட்டி நயன்தாராவின் சொத்து மதிப்பு

Actress Nayanthara: இங்க நான் தான் நம்பர் ஒன் அப்படின்னு கெத்தா வலம் வரும் நயன்தாரா நடிப்பையும் தாண்டி பல வழிகளில் கல்லாகட்டி வருகிறார். அதனாலேயே அவர் இப்போது பிரபல பாலிவுட் நடிகைகளுக்கு இணையான அந்தஸ்த்துடன் ஏகப்பட்ட சொத்துகளுக்கு அதிபதியாகவும் இருக்கிறார்.

தற்போது அதிக சம்பளம் வாங்கும் பட்டியலில் இருக்கும் இவருடைய சொத்து மதிப்பு மட்டுமே 200 கோடியாக இருக்கிறது. இது இல்லாமல் அவர் பல பிசினஸிலும் கால் பதித்து வெற்றி கண்டு வருகிறார். அந்த வகையில் நயன்தாராவுக்கு சென்னை, மும்பை உட்பட முக்கிய மாநிலங்களில் நான்கு சொகுசு வீடு இருக்கிறது.

Also read: விக்னேஷ் சிவனின் வரிகளில் ஹிட்டான 6 பாடல்கள்.. நயன்தாராவுக்காகவே உருகி எழுதிய சாங்

அதில் இப்போது அவர் கணவர் மற்றும் குழந்தைகளுடன் வசித்து வரும் நான்கு படுக்கை அறைகள் கொண்ட ஃபிளாட்டின் மதிப்பு 100 கோடி ஆகும். அதில் பிரத்தியேகமான திரையரங்கு, ஜிம், நீச்சல் குளம் என சகல வசதிகளும் இருக்கிறது.

மேலும் ஹைதராபாத்தில் இவருக்கு சொந்தமாக இரண்டு அடுக்குமாடி குடியிருப்புகள் இருக்கின்றன. அதன் மதிப்பு கிட்டத்தட்ட 60 கோடியை தாண்டும். அது மட்டுமின்றி BMW 7 மற்றும் 5 சீரிஸ் உட்பட பல சொகுசு கார்களும் இவரிடம் இருக்கிறது. இது எல்லாவற்றிற்கும் மேலாக நயனுக்கு சொந்தமாக 50 கோடி மதிப்புள்ள தனியார் ஜெட் விமானமும் இருக்கிறது.

Also read: தீபிகாவை வைத்து நயன்தாராவை டம்மி பீஸ் ஆக்கிய அட்லி.. செம காண்டில் இருக்கும் லேடி சூப்பர் ஸ்டார்

பாலிவுட் நடிகைகளான பிரியங்கா சோப்ரா, மாதுரி தீட்சித் உள்ளிட்ட சிலரிடம் தான் சொந்த விமானம் இருக்கிறது. அதைத்தொடர்ந்து நண்பர்களுடன் சேர்ந்து லிப் பாம் நிறுவனத்தையும் இவர் நடத்தி வருகிறார். மேலும் வெளிநாட்டு எண்ணெய் நிறுவனத்தின் குறிப்பிட்ட பங்குகளும் இவர் வசம் இருக்கிறதாம்.

இது தவிர ரவுடி பிக்சர்ஸ் மற்றும் ஸ்கின் கேர் நிறுவனம் என இவர் பல வழிகளில் கோடிக்கணக்கான லாபத்தை பார்த்து வருகிறார். இப்படி செல்வ சீமாட்டியாக இருக்கும் நயன்தாராவுக்கு பிசினஸ் மூளை அதிகம். அதனாலயே அவர் தன்னுடைய சொத்தை பல மடங்காக பெருக்கி பலரையும் தலைசுற்ற வைத்துள்ளார்.

Also read: காசு வாரி கொடுத்தா ஓகே, ஜெயம் ரவின்னா கசக்குதா.. தூக்கிவிட்டவரை நன்றி மறந்த நயன்தாரா

- Advertisement -

Trending News