மொத்தமாக பட்ட நாமம் போட பார்த்த ரவீந்தர்.. மன உளைச்சலில் போன் நம்பரை மாற்றிய மகாலட்சுமி

Actress Mahalakshmi: காதலுக்கு அழகு முக்கியம் இல்லை என்று தயாரிப்பாளர் ரவீந்தரை திருமணம் செய்து கொண்ட மகாலட்சுமி இப்போது உச்சகட்ட மன அழுத்தத்தில் தவித்துக் கொண்டிருக்கிறாராம். பண மோசடி வழக்கில் சிக்கிய அவருடைய கணவரை போலீசார் சில வாரங்களுக்கு முன்பு அதிரடியாக கைது செய்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

திடக்கழிவிலிருந்து மின்சாரம் தயாரிக்கலாம் என்று கூறி பாலாஜி என்பவரிடம் இருந்து 16 கோடியை அவர் ஆட்டைய போட்டதை தொடர்ந்து இப்போது பல விஷயங்களும் வெளியாகி கொண்டிருக்கிறது. அதாவது சம்பந்தப்பட்டவரை இப்படி ஒரு ப்ராஜெக்ட் இருப்பதாக நம்ப வைத்து ரவீந்தர் ஒரு வருட காலம் அலையவிட்டு இருக்கிறார்.

அதன் பிறகு பணம் தருகிறேன் என்று ஏமாற்றி இறுதியில் முடியவே முடியாது என்று அதிர்ச்சி கொடுத்திருக்கிறார். அதை தொடர்ந்து தான் இந்த கைது சம்பவம் நடந்திருக்கிறது. ஆனாலும் ரவீந்தர் இந்த வழக்கை மேல்முறையீடு செய்தார். அதுவும் தோல்வியில் தான் முடிந்தது. அதை தொடர்ந்து ஜாமீனுக்கும் முயற்சி செய்தார். ஆனால் அதுவும் கிடைக்கவில்லை.

அது மட்டுமல்லாமல் ஏற்கனவே இவர் பல பிரபலங்களிடம் இதுபோன்று ஆசை வார்த்தை கூறி ஏமாற்ற பார்த்திருக்கிறார். அதில் சிலர் பணத்தை கொடுத்து விட்டு இன்னும் அலைந்து கொண்டிருக்கிறார்களாம். அது தொடர்பான வழக்குகளும் இப்போது அவருக்கு எதிராக திரும்பி உள்ளது.

இப்படி மொத்தமாக பணத்தை வாங்கிக் கொண்டு பட்ட நாமம் போடப் பார்த்த புருஷனை நினைத்து மகாலட்சுமி கலங்கி தவிக்கிறாராம். ஏனென்றால் திருமணத்திற்கு முன்பு இது போன்ற விஷயங்கள் எதையும் ரவீந்தர் வெளிப்படையாக கூறாமல் மறைத்திருக்கிறார்.

அந்த வகையில் ஏற்கனவே விவாகரத்தாகி இரண்டாவது திருமணம் செய்து கொண்ட மகாலட்சுமிக்கு இது பேரிடியாக அமைந்துள்ளது. அதனாலேயே இப்போது அவர் தன் போன் நம்பரை கூட மாற்றி விட்டாராம். ஆக மொத்தம் கணவரை மலை போல் நம்பிய அவர் இப்போது நிம்மதி இல்லாமல் தவித்துக் கொண்டிருக்கிறார்.