வியாழக்கிழமை, டிசம்பர் 12, 2024

லியோ மேடை கிடைக்காததால் பாட்டு வரிகள் மூலம் பதிலடி கொடுத்த விஜய்.. காக்கா கழுகு சண்டை ஓயாது போல

Vijay: இந்தா வருது அந்தா வருதுன்னு ரொம்பவே ஆரவாரமாக காத்துக் கொண்டிருந்த லியோ படத்தின் ஆடியோ லான்ச் தற்போது விஜய்யின் ரசிகர்களுக்கு ஏமாற்றம் கொடுக்கும் வகையில் ரத்து செய்யப்பட்டு விட்டது. இதனால் ரசிகர்கள் ரொம்பவே துவண்டு போய்விட்டார்கள். இந்த சமயத்தில் அவர்களை குஷிப்படுத்தும் விதமாக நேற்று லியோ படத்தின் செகண்ட் சிங்கிள் பாடல் வரிகளை இறக்கி இருக்கிறார்கள்.

இந்த பாடல் வரிகள் கேட்பதற்கு ரொம்பவே ஆனந்தமாக இருக்கிறது என்று விஜய்யின் ரசிகர்கள் மிகவும் சந்தோசப்பட்டு வருகிறார்கள். அதற்கு காரணம் இந்த பாடல் வரிகள் மூலம் ரஜினிக்கு பதிலடி கொடுத்திருக்கிறார். அதாவது ரஜினி நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த ஜெயிலர் படத்தில் உள்ள பாடல் வரிகள் விஜய்யை தாக்கி தான் வந்திருக்கிறது என்று அப்பட்டமாகவே தெரிந்தது.

Also read: எதுக்காகவும் யார்கிட்டயும் மண்டியிட மாட்டேன்.. அரசியலில் கால் பதிப்பதால் எல்லாத்துக்கும் துணிந்த விஜய்

அந்த வகையில் தற்போது லியோ ஆட்டம் ஆரம்பம் என்பதற்கேற்ப நேற்று வெளியான லியோ படத்தின் இரண்டாவது பாடல்களின் வரிகள் மூலம் தரமான சம்பவத்தை ஏற்படுத்தி இருக்கிறார். மேலும் இந்த நேரத்தில் அந்த பாடல் வெளியிட்டதுக்கு காரணம் லியோ ஆடியோ லான்ச் இருந்தால் அதில் விஜய் குட்டி கதையை சொல்லி ரஜினி சொன்ன கதைக்கு பதிலாக ஏதாவது ஒரு ஸ்டோரியை சொல்லி இருப்பார்.

அது தற்போது இல்லாததால் இந்தப் பாட்டை இறக்கிவிட்டு எல்லாத்துக்கும் மொத்தமாக நெத்தியடி கொடுத்திருக்கிறார். இதனால் விஜய்யின் ரசிகர்கள் எங்களுக்கு இது போதும் தலைவா என்று அவர்களுடைய சந்தோஷங்களை வெளியிட்டு வருகிறார்கள். ஆக மொத்தத்தில் மறைமுகமாக விஜய் மற்றும் ரஜினி ஒருவரை ஒருவர் மோதிக் கொண்டுதான் வருகிறார்கள்.

Also read: கமல் ஒருபோதும் ரஜினியாக முடியாது, விஜய் ஒருபோதும் அஜித்தாக முடியாது.! காரணம் இதுதான்

மேலும் விஜய் இனிமேல் சினிமாவில் மட்டுமல்லாமல் அரசியலிலும் போட்டி போட தயாராக இருக்கிறேன் என்று சொல்லாமல் சொல்லி இருக்கிறார். தற்போது இந்த விஷயம் தான் இவருடைய ரசிகர்களுக்கு மிகப்பெரிய ட்ரீட்டாக அமைந்திருக்கிறது. இதனை தொடர்ந்து இன்னும் என்னென்ன சம்பவங்கள் லியோ படத்தில் நடக்க இருக்கிறது என்பதை பார்ப்பதற்கு ரசிகர்கள் ஆவலாக காத்துக் கொண்டிருக்கிறார்கள்.

அந்த வகையில் இப்போதைக்கு காக்கா கழுகு சண்டை ஓயாது போல. தொடர்ந்து இவர்களுடைய போட்டி வந்து கொண்டே இருக்கும். மேலும் விஜய் இப்போதெல்லாம் அஜித்தை டார்கெட் பண்ணுவதில்லை. அதற்கு பதிலாக தற்போது விஜய், ரஜினி என்று போட்டி போட்டுக் கொண்டு எதிரும் புதிருமாக சண்டையிட்டு வருகிறார்கள்.

Also read: லியோ ஆடியோ லான்ச் டிக்கெட் வித்து பிழைக்கணும்னு அவசியம் இல்ல.. பிஸ்மிக்கு விஜய் தரப்பில் கொடுத்த பதிலடி

- Advertisement -

Trending News