ஒரு நாளைக்கு 1.6 கோடி சம்பாதிக்கும் அண்ணாச்சியின் சொத்து மதிப்பு.. நம்ம ஊரு அம்பானியின் ஹைடெக் வீடு

Annachi Arul Saravanan Net Worth: கலர் கலரா சட்டைய போட்டுக்கிட்டு ஆடுவதும், சில படங்களில் சட்டையே இல்லாமல் நடிப்பதும் என்றாலே நம்முடைய ஞாபகத்துக்கு வருவது ராமராஜன் மட்டும்தான். அதில் லேட்டஸ்ட் ராமராஜன் ஆக கலர் கலராக டிரஸ் போட்டுக் கொண்டு பளிச்சென்று சினிமாவிற்குள் ஆட்டம் போட்டு வருபவர் தான் அண்ணாச்சி சரவணன் அருள். இவர் ஹீரோவாக தி லெஜன்ட் என்ற படத்தின் மூலம் அறிமுகமாகி இருக்கிறார்.

இதனைத் தொடர்ந்து ஒரு சில படங்களில் கமிட் ஆகி இருக்கிறார். அத்துடன் கூடிய விரைவில் இப்படத்திற்கான அதிகாரப்பூர்வ அப்டேட்டுகளை வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனாலும் 53 வயது ஆகிய நிலையிலும் அதையெல்லாம் பொருட்படுத்தாமல் தன்னம்பிக்கையுடன் ஹீரோவாக நடிப்பதற்கு வந்திருக்கிறார்.

அப்படிப்பட்ட இவருடைய மொத்த சொத்து மதிப்பு என்னவென்று தற்போது பார்க்கலாம். பொதுவாக கடை நிறுவனங்களுக்கு விளம்பரம் செய்ய வேண்டும் என்றால் முன்னணி நடிகர்கள் அல்லது முக்கியமான பிரபலங்களை வைத்து பிரபலமாக்குவார்கள். ஆனால் இவரோ என்னுடைய கடைக்கு நானே நடிக்கிறேன் என்று தன்னம்பிக்கையுடன் விளம்பரங்களில் நடித்தார்.

நடித்த முதல் விளம்பரத்திலேயே ஹன்சிகா, தமன்னா போன்ற முன்னணி நடிகைகளுடன் நடனமாடி அனைவரையும் அசத்தினார். அப்படிப்பட்ட இவருடைய சொத்து மதிப்பு தற்போது வெளியாகி பலரையும் வியந்து பார்க்க வைத்திருக்கிறது. அதாவது இவருக்கு சொந்தமாக சென்னையில் பல அடுக்குமாடி கூடிய துணி கடைகள் இருக்கிறது என்று அனைவருக்கும் தெரிந்த விஷயமே.

அத்துடன் ஏகப்பட்ட வீடுகள் மற்றும் இவருடைய சொந்த ஊரான திருநெல்வேலியில் ஹைடெக் தொழில்நுட்ப மாடலுடன் மிகப் பிரம்மாண்டமான வீடு ஒன்றை கட்டியிருக்கிறார். அடுத்ததாக இவரிடம் 10க்கும் மேற்பட்ட சொகுசு கார்கள், இதை அனைத்தையும் நிறுத்தி வைப்பதற்கு வீட்டுடன் சேர்ந்து கார் பார்க்கிங் ஒன்றையும் பெரிய அளவில் கட்டி வைத்திருக்கிறார்.

அந்த வகையில் இவரிடம் ஒட்டுமொத்த சொத்து மதிப்பாக 6000 கோடி வரை இருக்கிறது. இன்னும் சொல்லப்போனால் ஒருநாள் சம்பளமாக இவருக்கு 1 கோடி முதல் 1.6 கோடி வரை லாபத்தை பெற்று வருகிறார். அப்படிப்பட்ட சொத்தின் அதிபராக இருந்து ஹை ஃபை வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார். ஆனாலும் இவருடைய மிகப்பெரிய ஆசை சினிமாவில் ஹீரோவாக நிலைத்து பிரபலமாகி விட வேண்டும் என்பதுதான்.