வெள்ளிக்கிழமை, டிசம்பர் 13, 2024

கொஞ்சம் கூட கூச்சம் நாச்சமே இல்லாமல் அமலாபால் நடித்த 4 படங்கள்.. பிரசன்னாவிடம் சிக்கித் தவித்த மைனா

Amalapaul: அமலாபால் ஆரம்பத்தில் நடித்த ஒரு சில படங்களுக்கு பிறகு இவருடைய கேரியர் உச்சத்திற்கு சென்று முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடிக்கும் வாய்ப்பை பெற்றார். ஆனால் இதை சரியாக தக்க வைத்துக்கொள்ள முடியாமல் திடீரென்று இவருடைய மார்க்கெட் சரிந்து அதல பாதாளத்திற்குள் போய்விட்டது.

அதிலிருந்து மீண்டு வருவதற்காக வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடிக்கிறேன் என்ற பெயரில் கொஞ்சம் கூட கூச்சநாச்சமே இல்லாமல் ஏடாகூடமான படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். ஆனாலும் இவரால் கொஞ்சம் கூட முன்னுக்கு வர முடியாமல் தவிக்கிறார். அப்படி அமலாபால் நடித்து சர்ச்சையை ஏற்படுத்திய படங்களை பற்றி தற்போது பார்க்கலாம்.

Also read: வெப் சீரியஸ் நடிகை என முத்திரை குத்தப்பட்ட 5 நடிகைகள்.. வாய்ப்பு இல்லாமல் ஓடிடியில் தஞ்சம் அடைந்த அமலாபால்

சிந்து சமவெளி: இயக்குனர் சாமி இயக்கத்தில் ஹரிஷ் கல்யாண், அமலா பால் நடிப்பில் 2010 ஆம் ஆண்டு சிந்து சமவெளி திரைப்படம் வெளிவந்தது. இந்தப் படத்தில் அமலாபால் அவருடைய மாமனார் உடன் முறையேற்ற உறவில் வாழ்ந்து வருவார். அதற்கேற்ற மாதிரி எல்லை மீறும் காட்சிகளிலும் நடித்து இது என்ன கன்றாவியான படம் என்று பார்ப்பவர்களை முகம் சுளிக்கும் வகையில் இப்படத்தின் கதை அமைந்திருக்கும்.

திருட்டுப் பயலே 2: சுசி கணேசன் இயக்கத்தில் 2017 ஆம் ஆண்டு திருட்டுப் பயலே 2 திரைப்படம் வெளிவந்தது. இதில் பாபி சிம்ஹா, அமலாபால், பிரசன்னா மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். இப்படத்தில் பிரசன்னா நெகட்டிவ் கேரக்டரில் நடித்திருக்கிறார். மேலும் பேஸ்புக் மூலம் பல்வேறு இளம் மற்றும் திருமணமான பெண்களை மயக்கி அவர்களுடைய பலவீனத்தை தனக்கு சாதகமாக பயன்படுத்தி கொள்வார். இது தெரியாமல் அமலாபால், பிரசன்னாவிடம் சிக்கித் தவித்து மாட்டிக் கொண்டு முழித்து வருவார். அதன் பின் எப்படி இவர் பாதுகாக்கப்படுகிறார் என்பது மீதமுள்ள கதையாக இருக்கும்.

Also read: அமலா பால் கேரியரை காலி பண்ணிய உச்ச நட்சத்திரம்.. கவர்ச்சி காட்டி அடுத்தடுத்த படங்களில் நடித்தும் பிரயோஜனமில்லை

ஆடை: இயக்குனர் ரத்னகுமார் இயக்கத்தில் 2019 ஆம் ஆண்டு ஆடை திரைப்படம் வெளிவந்தது. இதில் அமலாபால், விவேக் பிரசன்னா, ரம்யா சுப்ரமணியன் மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். இப்படத்தில் அமலாபால் கொஞ்சம் கூட யோசனையே இல்லாமல், யாரும் நடிக்க முடியாத காட்சியை நடித்து சர்ச்சையை ஏற்படுத்தும் அளவிற்கு நடித்து இருப்பார்.

தி டீச்சர்: இயக்குனர் விவேக் இயக்கத்தில் கடந்த வருடம் தி டீச்சர் திரைப்படம் மலையாளத்தில் வெளிவந்தது. இதில் அமலாபால், செம்பன் வினோத் ஜோஸ், மஞ்சூ பிள்ளை மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். இப்படம் பெண்ணுக்கு நடக்கும் வன்கொடுமையை கண்டிக்கும் பொருட்டில் கதை நகரும். இதற்கிடையில் அமலா பால் நடித்த ஒவ்வொரு காட்சிகளும் மிகத் துணிச்சலுடன் அப்பட்டமாகவே நடித்துக் காட்டி இருப்பார்.

Also read: ரீல் ஜோடியில் இருந்து ரியல் ஜோடியாக மாறிய 5 தம்பதிகள்.. கேரியரை சோழி முடித்த பாபி சிம்ஹா

- Advertisement -

Trending News