பேத்தி வயது நடிகை என்று பாராமல் ஜோடி போட்ட ரஜினி.. கூச்சமே இல்லாமல் டூயட் பாடிய 6 கதாநாயகிகள்

Actor Rajini: பொதுவாக நடிகர்கள் 50 வயதை கடந்தும் ஹீரோக்களாக தான் நடித்து வருகிறார்கள். ஆனால் கதாநாயகிகள் குறுகிய காலத்திலேயே அண்ணி, அக்கா போன்ற கதாபாத்திரத்தில் நடிக்க ஆரம்பித்தது விடுகிறார்கள். அந்த வகையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பேத்தி வயது 6 நடிகைகளுடன் டூயட் பாடி இருக்கிறார்.

மீனா : மீனா ஆரம்பத்தில் ரஜினிகாந்துக்கு மகளாக ஒரு படத்தில் நடித்த நிலையில் மீண்டும் குழந்தை நட்சத்திரமாக அன்புள்ள ரஜினிகாந்த் படத்தில் நடித்திருந்தார். இந்நிலையில் ரஜினிக்கு ஜோடியாக முத்து படத்தில் அவர் நடித்த போது சர்ச்சை வெடித்தது. எஜமான் போன்ற சில படங்களில் மீனா ரஜினியுடன் ஜோடி போட்டு இருக்கிறார். மேலும் இவர்கள் இருவருக்கும் இடையே கிட்டத்தட்ட 26 வயது வித்தியாசம் இருக்கிறது.

Also read: 37 வருடங்களுக்கு முன்பே விஜயகாந்துக்கு கிடைத்த சூப்பர் ஸ்டார் பட்டம்.. தேவையே இல்லைன்னு தூக்கி எறிந்த கேப்டன்

அனுஷ்கா : தமிழ் சினிமாவில் குறுகிய காலத்திலேயே டாப் நடிகர்களுடன் ஜோடி போட்ட அனுஷ்கா ரஜினியுடன் லிங்கா படத்தில் நடித்திருந்தார். இவருக்கும் ரஜினிக்கும் கிட்டத்தட்ட 30க்கும் மேற்பட்ட வயது வித்தியாசம் இருந்தது. ஆகையால் ரஜினிக்கு ஜோடி அனுஷ்காவா என அப்போது ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

சோனாக்ஷி சின்ஹா : லிங்கா படத்தில் பிளாஷ் பேக் காட்சிகளில் சோனாக்ஷி சிங்ஹா உடன் ரஜினி ஜோடி போட்டிருப்பார். அதோடு மட்டுமல்லாமல் இந்த படத்தில் இவர்கள் இருவரும் சேர்ந்து டூயட் பாடலில் ஆடி இருப்பார்கள். இவர்கள் இடையே கிட்டத்தட்ட 38 வயது வித்தியாசம் உள்ளது. மேலும் சோனாக்ஷி தந்தையும், ரஜினியும் நெருங்கிய நண்பர்கள். இருவருக்கும் கிட்டத்தட்ட ஒரே வயது உள்ள நிலையில் தன்னுடைய மகளாக பார்க்கப்படுவர் உடன் டூயட் பாடியது பேசு பொருளாக மாறியது.

Also read: பொங்கலுக்கு போட்டி போட்டு கல்லாகட்ட வரும் 9 படங்கள்.. சிவகார்த்திகேயனை பதம் பார்க்க வரும் ரஜினி

ஐஸ்வர்யா ராய் : உலக அழகி ஐஸ்வர்யா ராய் மற்றும் ரஜினிக்கும் கிட்டத்தட்ட 23 வயது வித்தியாசம் உள்ளது. ஆரம்பத்தில் ரஜினி பட வாய்ப்பு வரும்போது ஐஸ்வர்யா மறுத்து வந்தார். அதன் பிறகு அவரது மார்க்கெட் சரிய தொடங்கிய போது தான் எந்திரன் படத்தில் ரஜினிக்கு ஜோடியாக ஐஸ்வர்யா ராய் நடித்திருந்தார்.

ஸ்ரேயா : ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் வெளியான எந்திரன் படத்தில் ஸ்ரேயா நடித்திருந்தார். அப்போது இவருக்கு வெறும் 25 வயது தான். ஆனாலும் அப்போது ரஜினியுடன் ஒரு புது முக நடிகையை அறிமுகம் செய்ய வேண்டும் என்று மழை படத்தை பார்த்தபின் சிவாஜி படத்தில் ஸ்ரேயாவை புக் செய்தனர். ரஜினிக்கும் ஸ்ரேயாவுக்கும் இடையே கிட்டத்தட்ட 31 வயது வித்தியாசம் உள்ளது.

Also read: தலைவர் 170 இல் இணைந்த துணிச்சலான இரண்டு கதாநாயகிகள்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்ட லைக்கா

நயன்தாரா : நயன்தாரா மற்றும் ரஜினி இருவருக்கும் கிட்டத்தட்ட 35 வயது வித்தியாசம் உள்ளது. சந்திரமுகி படத்தில் ரஜினியுடன் நயன்தாரா நடித்த நிலையில் அதன் பிறகு தர்பார், அண்ணாத்த போன்ற படங்களிலும் ஜோடி போட்டு நடித்து இருந்தார். இவ்வாறு ரஜினி வயது வித்தியாசம் பார்க்காமல் குறைந்த வயதுள்ள நடிகைகளுடன் ஜோடி போட்டு இருக்கிறார்.