சனிக்கிழமை, டிசம்பர் 14, 2024

4வது நாளே போட்டியாளர்களை வச்சு பிதுக்கும் பிக் பாஸ் 7.. மேக்கப் இல்லன்னா இவங்க மூஞ்ச பார்க்கவே முடியாதே குருநாதா

Bigg Boss Season 7 Promo: சீசன் 7 துவங்கப்பட்ட நாளே நாளில் வீட்டில் இருக்கும் போட்டியாளர்களை பிக் பாஸ் வச்சு செய்கிறார். மற்ற சீசன்களை காட்டிலும் இந்த சீசன் ஆரம்பித்த ஒரு சில தினத்திலேயே சூடு பிடிச்சிருச்சு. இந்த முறை ஏகப்பட்ட மாற்றங்களை கொண்டு வந்து நிகழ்ச்சியை கூடுதல் விறுவிறுப்பாகி கொண்டிருக்கின்றனர்.

அதுவும் தற்போது வெளியாக இருக்கும் ப்ரோமோவை வைத்து பார்த்தால் வீட்டில் இருக்கும் போட்டியாளர்களின் மேக்கப் பொருட்களை பறிக்க வேண்டும் என பிக் பாஸ் குறி வைத்திருக்கிறார். இது சுவாரசியமாக இருந்தாலும் இந்த மூஞ்சிகளை எல்லாம் மேக்கப் இல்லாமல் எப்படி பார்க்க முடியும். எங்க நிலைமையை கொஞ்சம் யோசிச்சு பாருங்க குருநாதா என்று நெட்டிசன்கள் ப்ரோமோவை பார்த்துவிட்டு கலாய்க்கின்றனர்.

Also Read: 7 பேரில் இந்த வாரம் வெளியேறப் போகும் பிக் பாஸ் போட்டியாளர்.. சுத்தி சுத்தி செய்யும் மட்டமான வேலை

பிக் பாஸ் வீட்டில் இருக்கும் போட்டியாளர்களுக்கு இந்த வாரத்திற்கான ஷாப்பிங் ரீ பேமென்ட் டாஸ்க் இன்று நடத்தப்பட்டது. இந்த டாஸ்கின் பெயர் வெயிட் பார்ட்டி. இந்த டாஸ்க்கில் தோற்று விட்டால் அவர்களது மேக்கப் பொருட்கள் அனைத்தும் பறிக்கப்படும். இப்படி ஒரு வில்லத்தனமான டாஸ்க் கொடுத்து பெண் போட்டியாளர்களை கதி கலங்க வைத்திருக்கின்றனர்.

வெயிட் பார்ட்டி டாஸ்கில் எடை மிஷின் 340 கிலோ காட்ட வேண்டும். இதற்கு எத்தனை போட்டியாளர்கள் வேண்டுமானாலும் எடை மேடையில் ஏறி நின்று கொள்ளலாம். ஆனால் ஒவ்வொருவரும் வீட்டில் இருக்கும் ஏதாவது ஒரு பொருளை கையில் எடுத்துக் கொண்டு அதோடு எடை மேடையில் நிற்கணும். இதுதான் இந்த டாஸ்கின் ரூல்ஸ்.

Also Read: செழியினை விட கோபியை பரவாயில்லை போல.. இந்த நிலைமையிலும் பொம்பள சோக்கு கேக்குதா?

பிக் பாஸ் சொன்னது போல் 340 கிலோவிற்கு ஏற்றவாறு போட்டியாளர்களை தேர்வு செய்து எடை மேடையில் நிற்க வைத்தனர். ஆனால் கடைசி நிமிடத்தில் பிரதீப் கால் தடுமாறி எடை மேடையில் இருந்து கீழே இறங்கி விட்டார். அப்படி என்றால் இந்த டாஸ்க்கில் பிக் பாஸ் போட்டியாளர்கள் தோற்றுவிட்டனர்.

ஏற்கனவே பிக் பாஸ் சொன்னது போல் வீட்டில் இருக்கும் போட்டியாளர்களின் மேக்கப் பொருட்கள் அனைத்தும் பறிக்கப்பட போகிறது. இத நினைச்சா தான் கொஞ்சம் பயமா இருக்கு. பிக் பாஸ் வீட்டில் இருக்கும் பூர்ணிமா ரவி, மாயா, அக்ஷயா, ஜோவிகா போன்ற பெண் போட்டியாளர்கள் எல்லாம் மேக்கப் போட்டா தான் கொஞ்சமாவது பார்க்க முடியும்.

Also Read: கடுப்பேத்தும் அசீம் 2.0, புத்திசாலித்தனமாக காய் நகர்த்தும் வாயாடி பெத்த புள்ள.. சுவாரஸ்யமாகும் பிக்பாஸ் 7

அதுவே இனி இல்லை என்றால் இந்த வாரம் முழுவதும் இந்த மூஞ்சிகளை எப்படி சகிக்கிறது என தற்போது வெளியாகி இருக்கும் ப்ரோமோவால் பிக் பாஸ் ரசிகர்கள் தலையில் அடித்துக் கொள்கின்றனர். ஆனால் இந்த போட்டியில் கலந்து கொள்ள முடியாமல் ஒதுக்கி வைக்கப்பட்ட ஸ்மால் பாஸ் போட்டியாளர்களுக்கு ஒரு பக்கம் சந்தோஷமா இருக்கு.

பிக் பாஸ் போட்டியாளர்களை வச்சு செய்யும் ப்ரோமோ இதோ!

- Advertisement -

Trending News