விஜய் மீது வைக்கப்படும் ரெண்டு குற்றச்சாட்டு.. உஷாராகி ஒதுங்கிய சூப்பர் ஸ்டார்

Vijay: பொதுவாக ஒருவர் வளர்ந்து விட்டாலே அவர்களை சுற்றி பிரச்சனைகளும் வளர்ந்து கொண்டே வரும். அந்த வகையில் விஜய் தற்போது ஆட்டநாயகனாகவும், வசூல் மணமாகவும் வளர்ந்து கோடிக்கணக்கான ரசிகர்கள் மனதை வென்றிருக்கிறார். அத்துடன் அரசியலிலும் தடம் பதிக்கிறார் என்றதும் ஏகப்பட்ட குற்றச்சாட்டுகள் இவர் மீது தொடர்ந்து வந்து கொண்டே இருக்கிறது.

அந்த வகையில் இவர் மீது தனிப்பட்ட முறையில் எந்தவித குறையுமே சொல்ல முடியாது. ஆனாலும் இவரை சுற்றி தற்போது இரண்டு குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டிருக்கிறது. அதாவது இவர் எந்த அளவிற்கு நடிப்பின் நாயகனாக இருக்கிறாரோ, அதற்கு எதிர் மாறாக அரசியலின் நுணுக்கங்களை பற்றி எதுவும் தெரியாத ஒரு நடிகராக தான் இருக்கிறார்.

அப்படி இருக்கும் பட்சத்தில் எந்த தைரியத்தில் அரசியலில் கால் வைக்க நினைக்கிறார் என்பது இவர் மீது வைக்கப்பட்ட குற்றச்சாட்டு. அடுத்ததாக எந்த விதத்திலும் இவருடைய அப்பா அம்மாவிடம் ஒட்டாமல் தனியாக வாழ்ந்து வருகிறார். அதுவும் எப்படி என்றால் என்றைக்காவது ஒரு முறை பார்த்தால் ஏதோ விருந்தாளியை பார்ப்பது போல் பழகுகிறார்.

அப்படிப்பட்ட இவர் எப்படி ஒரு நல்ல தலைவராக இருக்க முடியும் என்று தொடர்ந்து இவர் மீது கேள்விகள் வைக்கப்பட்டது. இந்நிலையில் எல்லாத்துக்கும் முடிவு கட்டும் விதமாக விஜய் ஒவ்வொரு பிரச்சினையாக சரி செய்து வருகிறார். அந்த வகையில் இவருடைய குடும்பப் பிரச்சினையை முதலில் தீர்த்து வைக்கும் பொருட்டாக தற்போது அம்மா அப்பாவுடன் நெருங்கி பழகிக் அவர்கள் மீது ரொம்பவே அக்கறையுடன் நடந்து கொண்டு வருகிறார்.

அடுத்தபடியாக அரசியலிலும் இவர் ஜெயிக்க வேண்டும் என்பதற்காக அதற்கான நுணுக்கமான விஷயங்களை ஒவ்வொன்றாக கற்றுக் கொண்டு வருகிறார். அந்த வகையில் மாணவர்கள் மற்றும் இல்லாதவர்களுக்கு பல நல்ல விஷயங்களை செய்து சிறந்த தலைவர் மற்றும் பொறுப்பானவர் என்ற பெயரையும் பெற்று வருகிறார்.

இருந்தாலும் இவரை சுற்றி பிரச்சனைகள் வந்து கொண்டே தான் இருக்கிறது. இதனால் தான் இந்த பிரச்சினையில் எல்லாம் தலையில் சுமக்க முடியாது என்று ரஜினி ரொம்பவே உஷாராகி அரசியலே வேண்டாம் என்று ஒதுங்கி இருக்கிறார். ஏனென்றால் அவருக்கும் அரசியல் பற்றி எந்த ஒரு விஷயமும் தெரியாது. அதனால் தான் ஒரேடியாக அரசியலுக்கு முழுக்கு போட்டிருக்கிறார்.