சனிக்கிழமை, டிசம்பர் 14, 2024

உங்களிடம் கெஞ்சி பொழப்பு நடத்தனும் அவசியம் இல்ல.. ரெட் ஜெயிண்ட் உதயநிதி இல்லாமல் சாதிக்கும் லியோ

Leo Vijay VS Red Giant : லியோ படத்தை ஆரம்பிக்கும் பொழுது விஜய் இந்த படத்தை எக்காரணம் கொண்டும் ரெட் ஜெயன்ட் மூவிஸ் கையில் இந்த படம் போகக்கூடாது என்பதில் உறுதியாக இருந்தார். அதன்படியே படத்தை நன்றாக தொடங்கி முடித்து தற்போது அதற்கான ட்ரெய்லரும் வெளியிடப்பட்டு விட்டது.

இந்த படத்தின் ஆடியோ லான்ச் மிகவும் எதிர்பார்க்கப்பட்டு திடீரென ரத்து செய்யப்பட்டது. அதற்கு பல காரணங்கள் சொன்னாலும் அது அரசியல் கணக்காக தான் பார்க்கப்பட்டது. முக்கியமாக உதயநிதி தான் இந்த வேலையை செய்து விட்டார் என்று அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டது. ஆனால் உண்மை அது இல்லை.

Also Read : கெட்ட வார்த்தை, வன்முறை, ரத்தம், பயத்தை காட்டிய விஜய்.. ஏமாற்றியதா லியோ ட்ரெய்லர்?

அதேபோல் தற்பொழுது இந்த படத்தின் டிரைலர் வெளியாகி உள்ளது. இந்த ட்ரெய்லரை திரையரங்கில் வெளியிடக்கூடாது என்று அறிவுறுத்தப்பட்டது. அதை மீறி சில தியேட்டர்கள் ரசிகர்களை சந்தோஷப்படுத்த தியேட்டருக்குள் அனுமதித்து திரையிட்டனர். அந்த தியேட்டர்கள் சூறையாடப்பட்டது. இதற்காகத்தான் போலீஸ் அனுமதி மறுத்தது என்பது தற்பொழுது தெரியவந்துள்ளது.

இப்பொழுது இந்த படத்தை ரெட் ஜெயன்ட் மூவிஸ் வெளியிடவில்லை. இந்த படத்தின் தயாரிப்பாளர் சொந்த முயற்சியில் வெளியிடுகிறார். இந்த படத்தை உதயநிதி உதவி இல்லாமலே தற்போது நிலவரப்படி 900 தியேட்டர்களில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது இன்னும் அதிகரிக்க கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Also Read : எவ்வளவு பெரிய தூண்டில் போட்டாலும் சிக்காத ரெட் ஜெயன்ட்.. லியோவுக்கு லலித் போடும் தப்பு கணக்கு

ரெட் ஜெயன்ட் உதவி இல்லாமல் அதுவும் முன்னதாகவே இவர்கள் வேண்டாம் என்று முடிவு செய்யப்பட்டு படத்தை வெளியிடுகிறார்கள். இப்படி வெளியாகும் பெரிய படம் இந்த படம் மட்டும்தான். பிரச்சனை வரக்கூடாது என்பதால் உதயநிதியிடம் சில ஏரியாக்கள் நீங்கள் வெளியிடுங்கள் என கொடுக்கப்பட்டது அவர் வாங்கவே இல்லை.

இப்போது வரை பிரச்சனையாக இருந்தாலும் படம் சரியான பாதையில் தான் வந்து கொண்டிருக்கிறது. ஆனால் இந்த ட்ரெய்லரில் நடந்த சம்பவம் இதை பயன்படுத்தி படம் வெளியிடும் நேரத்தை மாற்றியமைக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. ஏற்கனவே அதிகாலை காட்சி கிடையாது என்று அறிவித்த அரசு இதை பார்த்த பிறகு இன்னும் தாமதமாக படத்தை வெளியிட உத்தரவு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. ரெட் ஜெயன்ட் மூவிஸ் படத்தை வாங்கவில்லை என்றாலும் இந்த படம் சாதனை செய்து வருகிறது.

Also Read : இப்படி வீடியோ போட்டு மானத்தை வாங்கனுமா? லியோ 1000 கோடி வசூல் இருக்கட்டும் இதுக்கு பதில் சொல்லுங்க விஜய்

- Advertisement -

Trending News