வியாழக்கிழமை, டிசம்பர் 12, 2024

இதுக்கு மேலயும் வாய பொத்திகிட்டு இருப்பது சரியா.? தளபதி விஜய்க்கு வலுக்கும் கண்டனங்கள்.!

விஜய் படங்கள் என்றாலே எப்பொழுதுமே பிரச்சனை அதுவும் தலைவா படத்தில் இருந்து அவருக்கு தொடர்ந்து ஏதோ ஒரு விதத்தில் பிரச்சனை வந்து கொண்டே இருக்கும். அதற்கு தகுந்த மாதிரி அவரும் படங்களில் ஏடாகூடமான பிரச்சனைக்குரிய காட்சிகளில் நடித்து படத்தை வெளியிட ஆசைப்படுவார்.

ஆனால் சமீப காலமாக விஜய் ரசிகர்கள் செய்யும் செயல்கள் முகம் சுளிக்கும் அளவில் உள்ளன. இதில் அஜித் படங்கள் தொடர்ந்து வராததால் அவரது ரசிகர்களினால் பிரச்சினை இல்லை. ஆனால் விஜயின் படம் தொடர்ந்து வருவதால் அவரது ரசிகர்களின் வெறியாட்டம் அதிகமாகிக் கொண்டே செல்கிறது.

Also Read : சேர்த்து வச்ச பேரெல்லாம் போச்சு.. ஹாலிவுட் படங்களை காப்பியடித்த லோகேஷ், வம்பில் சிக்கிய லியோ

தற்பொழுது லியோ படத்தில் ட்ரெய்லர் ரோகினி திரையரங்கில் வெளியிடப்பட்டது அதற்கு காவல்துறை அப்படி கூட்டத்தைக் கூட்டி வெளியிடக் கூடாது என்று தடை விதித்தனர். ஆனால் ரோகினி திரையரங்கம் திரையரங்குக்குள் ரசிகர்களை அனுமதித்து ட்ரைலர் வெளியிட்டு அவர்களை குஷி படுத்தியது. ஆனால் ரசிகர்கள் திரையரங்கை சல்லி சலியாக உடைத்து தியேட்டரை சூறையாடிவிட்டனர்.

ஏற்கனவே ரோகிணி தியேட்டர் வாரிசு மற்றும் துணிவு படங்களின் மூலம் பல நஷ்டங்களை சந்தித்தது இப்பொழுது தயார் செய்த தியேட்டரை மீண்டும் விஜய் ரசிகர்கள் ட்ரெய்லருக்கே இப்படி செய்துவிட்டனர். இதை ஏன் விஜய் இதுவரை கேட்கவில்லை. இதற்கு முன்பு விஜய் கேட்காமல் இருந்தால் அது பிரச்சினையாக தெரியவில்லை இனிமேல் அப்படி இல்லை.

Also Read : உங்களிடம் கெஞ்சி பொழப்பு நடத்தனும் அவசியம் இல்ல.. ரெட் ஜெயிண்ட் உதயநிதி இல்லாமல் சாதிக்கும் லியோ

விஜய் அரசியலுக்கு வருகிறேன் என்று சொல்லியும் அவரது நடைமுறை செயல்கள் எதுவும் மாறவில்லை. இதற்கு பதில் அளித்து தியேட்டருக்கு உரிய நஷ்டத்தை தருகிறேன் என்று கூற வேண்டும். அதேபோல் ரசிகர்கள் இது மாதிரி செய்யக்கூடாது என்று அவர்களுக்கு அறிவுரை வழங்க வேண்டும். எதையும் செய்யாமல் அமைதி காத்து வருகிறார் விஜய் இப்படி இருந்தால் அரசியலில் எப்படி ஜொலிக்க முடியும் என்று தெரியவில்லை.

தனது நடவடிக்கைகளில் எந்த மாற்றமும் விஜய் இதுவரை புதிதாக கொண்டு வரவில்லை. சின்ன விஷயம் தனது ரசிகர்களை கட்டுப்படுத்த முடியாத இவர் எப்படி தமிழ்நாட்டை ஆள வேண்டும். தமிழ்நாட்டு மக்களை வழிநடத்த முடியும். இனிமேல் விஜய் எல்லா விஷயங்களுக்கும் வாய் திறந்து பேசி அதற்கான முடிவை அறிவிக்க வேண்டும் இல்லையென்றால் எல்லாம் தப்பாகத் தான் முடியும்.

Also Read : லியோவை ஓவர் டேக் செய்யும் வெங்கட் பிரபு.. தளபதி 68-ல் இணைந்த 10 பிரபலங்களின் லிஸ்ட்

- Advertisement -

Trending News