ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 15, 2024

எவ்வளவு தாண்டா ஒருத்தனை போட்டு மிதிப்பீங்க.. வசூலில் ரெக்கார்டு வைக்க படாத பாடுபடும் லியோ

Actor Vijay In Leo: எத்தனையோ முன்னணி நடிகர்கள் உச்சத்தில் இருந்தாலும் விஜய்க்கு மட்டும் தான் எங்கிருந்தாவது பிரச்சனை வந்து கொண்டே இருக்கிறது. அதிலும் அவர் நடித்த படங்களை முழுசா திரையரங்குகளில் ரிலீஸ் செய்வதற்குள் அவர் படும் பாடு இருக்கே அய்யய்யோ. அந்த வகையில் லோகேஷ் கூட்டணில் விஜய் நடித்துள்ள லியோ படத்திற்கு தொடர்ந்து பிரச்சனை மற்றும் சர்ச்சை வெடித்துக் கொண்டே வருகிறது.

அதாவது இந்த படத்தின் மூலம் இவருடைய மார்க்கெட் ரேட்டும் பிசினஸ் வசூலும் ரொம்பவே அதிகரித்து விட்டது. இதனை தொடர்ந்து வளர விட்டால் எட்டாத தூரத்திற்கு இவர் போய்விடுவார் என்ற நினைப்பில் சில சூழ்ச்சி வேலைகள் இவருக்கு எதிராக நடைபெற்று வருகிறது. அத்துடன் இந்த படத்தின் மூலம் நிறைய அவப்பெயர்களை கொடுத்து அரசியலிலும் இவரை காலி பண்ண வேண்டும் என்றும் பல சதி வேலைகள் நடக்கிறது.

Also read: காதலுக்கு மரியாதை விஜய்யை திரும்ப கொண்டு வரும் தளபதி 68.. பல கோடிகளை வாரி இறைக்கும் ஏஜிஎஸ்

ஆனால் எத்தனையோ பிரச்சனைகள் வந்தாலும் நான் தனி ஒருவனாகவே இருந்து எதிர்கொள்வேன். யாருக்காகவும் எவரிடமும் நான் மண்டியிட வேண்டிய அவசியம் இல்லை என்று சாதுரியமாக ஒவ்வொரு பிரச்சனைகளையும் தகர்த்து எறிந்து வெற்றி பாதையை நோக்கி பயணித்துக் கொண்டு வருகிறார். ஆனால் தற்போது லியோ படத்தின் டிரைலர் வெளியானதை ஒட்டி மாபெரும் சர்ச்சை பூகம்பமாக வெடித்திருக்கிறது.

அதாவது அந்த ட்ரெய்லரில் அதிகமான வன்முறை காட்சிகளும், நிறைய கெட்ட வார்த்தைகளும் இருப்பது அப்பட்டமாக தெரிகிறது. அதிலும் விஜய் இந்த மாதிரியான கெட்ட வார்த்தைகளை பேசி பெண்களுக்கு அவமரியாதை கொடுத்து இருக்கிறார் என்றும். இதை சரியான முறையில் தணிக்கை செய்யாமல் யூட்யூபில் வெளியிட்டது தவறும் என்று இவர் மீது குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டிருக்கிறது.

Also read: மொத்தத்தையும் காலி செய்த லியோ ட்ரெய்லர்.. விஜய்க்கு சிக்கலை ஏற்படுத்திய 7 விஷயங்கள்

அத்துடன் இதில் சம்பந்தப்பட்ட விஜய், லோகேஷ் மற்றும் படக்குழு மீது நடவடிக்கை எடுக்கவும் புகார் அளிக்கப்பட்டிருக்கிறது. அது மட்டுமில்லாமல் இந்த படத்தில் பேசிய மட்டமான வார்த்தைகளை உடனடியாக நீக்க வேண்டும் என்று சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் இந்து மக்கள் கழகம் சார்பில் புகார் கொடுக்கப்பட்டிருக்கிறார்கள்.

இப்படி தொடர்ந்து லியோ படத்திற்கு விஜய்க்கும் டார்ச்சர் கொடுத்துக் கொண்டே இருக்கிறார்கள். ஆனாலும் இதையெல்லாம் ஒரு தனி ஆளாக இருந்து சமாளித்து எப்படியாவது லியோ படத்தின் வசூலை அதிகரித்து அனைவரது வாயையும் அடைத்து விட வேண்டும் என்று விஜய் படாத பாடு பட்டு வருகிறார்.

Also read: லியோ சோலிய முடிச்சிட்டு நியாயமா பேசுறாங்களாம்.. ஆரம்பிக்கிறதுக்கு முன் விஜய்க்கு வச்ச முற்றுப்புள்ளி

- Advertisement -

Trending News