வியாழக்கிழமை, டிசம்பர் 12, 2024

லோகேஷ் படத்தில் நடிக்க மறுத்த நயன்தாரா.. மாஸ்டரோட படதோல்வியினால் உஷாரான லேடி ஸ்டார்

கோலிவுட்டில் மட்டுமல்ல பாலிவுட் வரை கலக்கி கொண்டிருக்கும் நயன்தாரா சினிமாவில் ஒவ்வொரு அடியையும் பார்த்து பார்த்து எடுத்து வைக்கிறார். இவருடைய திருமணம், பின்பு வாடகை தாய் முறை மூலம் இரட்டைக் குழந்தைகள் என தன்னுடைய கேரியருக்கு எந்த பங்கமும் வந்து விடக்கூடாது என உசாராக இருக்கிறார்.

அதிலும் லோகேஷ் கனகராஜ் படத்தில் நடிப்பதாக ஒத்துக் கொண்டு இப்போது அந்த படத்தில் இருந்து அதிரடியாக விலகிவிட்டார். லோகேஷின் நெருங்கிய நண்பரான ரத்னகுமார் இயக்கும் புதிய படத்தில் நயன்தாரா கதாநாயகியாக நடிக்க கமிட் ஆனார். இந்த படத்தில் கதாநாயகனாக டான்ஸ் மாஸ்டரும் நடிகருமான ராகவா லாரன்ஸ் நடிக்கிறார்.

Also Read: காசு வாரி கொடுத்தா ஓகே, ஜெயம் ரவின்னா கசக்குதா.. தூக்கிவிட்டவரை நன்றி மறந்த நயன்தாரா

இந்த படத்தை லோகேஷ் கனகராஜ் தான் தயாரிக்கிறார். இந்த படத்தில் லாரன்ஸ்- நயன்தாரா இருவருக்குமே ஸ்கோப் இருக்கும் வகையில் தான் திரில்லர் ஸ்கிரிப்ட்டை செம சூப்பராக தயாரித்தனர். ஆனால் இப்போது ராகவா லாரன்ஸின் மார்க்கெட் படுத்து விட்டதால் அவருடன் இணைந்து நடித்த நம்மளுடைய சோலியையும் முடிச்சு விட்டுருவாங்க என்று நயன்தாரா இந்த படத்திலிருந்து விலகி உள்ளார்.

காரணம் சமீபத்தில் இயக்குனர் பி வாசு இயக்கத்தில் ராகவா லாரன்ஸ் ஹீரோவாக நடித்து வெளியான சந்திரமுகி 2 படம் பயங்கர ப்ளாக் ஆனது. இந்த விஷயத்தை மனதில் வைத்துக் கொண்டுதான் நயன்தாரா இந்த படத்திலிருந்து விலகினார்.

Also Read: தீபிகாவை வைத்து நயன்தாராவை டம்மி பீஸ் ஆக்கிய அட்லி.. செம காண்டில் இருக்கும் லேடி சூப்பர் ஸ்டார்

நயன்தாரா ரொம்பவே சுயநலமாக யோசித்து படத்திலிருந்து விலகியதால் படக்குழுவினர் பயங்கர அப்செட்டில் இருக்கின்றனர். இருப்பினும் இந்த படத்தின் இயக்குனர் ரத்னகுமார் இதை தைரியமாக எதிர் கொண்டு இப்போது மற்றொரு ஸ்கிரிப்ட் தயாரித்து நயன்தாராவிற்கு பதில் வேறொரு நடிகை நடிக்க வைக்க திட்டமிட்டு இருக்கிறார்.

இந்த படத்தில் லோகேஷ் தயாரிப்பாளராக மட்டுமல்லாமல் வசனம் மற்றும் திரைக்கதையிலும் பங்களித்துள்ளார். இந்த படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் படப்பிடிப்பை விரைவில் துவங்கவும் திட்டமிட்டுள்ளனர்.

Also Read: லேடி சூப்பர் ஸ்டார் கேரியரில் ஜெயித்துக் காட்டிய 10 படங்கள்.. திரை உலகமே மிரள வைக்கும் IMDB ரேட்டிங்

- Advertisement -

Trending News