மோந்து பார்த்தாலே போதும், சோலி முடிஞ்சு.. கம்பி கட்டுற கதை எல்லாம் சொல்லும் ரட்சிதா

Actress Rakshitha Mahalakshmi: சின்னத்திரையில் டாப் நடிகையாக ரவுண்டு கட்டிய ரட்சிதா மகாலட்சுமிக்கு இன்றும் ஏகப்பட்ட ரசிகர்கள் இருக்கின்றனர். இவர் பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிறகு தற்போது ஒரு சில பட வாய்ப்புகள் கிடைத்துள்ளது.

தற்போது ராதா மோகன் இயக்கத்தில் உப்பு கருவாடு படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் ரட்சிதா மகாலட்சுமி நடித்து வருகிறார். இந்த நிலையில் அவர் தனக்கு இருக்கும் ஹார்மோன் நோயை குறித்து வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.

ரட்சிதாவிற்கு வந்திருப்பது ஒரு அரியவகை நோயாம். பொதுவாக ஒருவருக்கு அதிகம் சாப்பிட்டால் தான் வெயிட் கன்னா பின்னான்னு ஏறும். ஆனால் ரட்சிதாவிற்கு எதுவும் சாப்பிடாமலே உடல் ஏறுகிறதாம். உணவை மோந்து பார்த்தாலே போதும் சோலி முடிஞ்சது.

அதாவது அந்த உணவின் வாசனை மூலம் உடல் எடை கூடுகிறதா! இதைப் பற்றி சமீபத்தில் அவருடைய பேமிலி டாக்டரே அவரிடம் கூறினாராம். இது ஒரு விதமான ஹார்மோன் பிரச்சனையால் ரட்சிதாவிற்கு ஏற்பட்டு இருக்கிறது.

அது எப்படி மோந்து பார்த்தாலே சாப்பிட்டதற்கு சமமாய் உடல் எடை ஏற முடியும். இல்லாத கம்பி கட்டுற கதை எல்லாம் சொல்றதை பாரு என்று ரட்சிதாவின் இந்த பேட்டியை பார்த்த நெட்டிசன்கள் மீம்ஸ் போட்டு கலாய்த்து தள்ளுகின்றனர்.

ஆனால் ரட்சிதா முன்பை விட நாளுக்கு நாள் குண்டாகிட்டே போறாங்க. இதற்கு காரணம் கேட்கும் போது தான் இப்படி ஒரு விசித்திரமான பதிலை சொல்லி இருக்கிறார். இவருக்கு வயசு என்ன கம்மியா! 33 வயதாகும் ரட்சிதா இன்னும் கதாநாயகி ரேஞ்சுக்கு பில்டப் காட்டுவது தான் கொஞ்சம் ஓவரா இருக்கு.