சனிக்கிழமை, டிசம்பர் 14, 2024

உங்க ரொமான்ஸ் தாங்கல, டிஆர்பியும் இல்ல.. 600 எபிசோடை கடந்த சீரியலுக்கு எண்டு கார்டு போட்ட விஜய் டிவி

Vijay Tv Serial: என்டர்டைன்மென்ட் என்றாலே அது விஜய் டிவி தான். சின்னத்திரை ரசிகர்களுக்கு பிடித்தமான ரியாலிட்டி ஷோக்களையும் சீரியல்களையும்  விஜய் டிவி போட்டி போட்டுக் கொண்டு ஒளிபரப்பு செய்கிறது. ஆனால் டிஆர்பி-யில் டாப் 5 இடங்களை பிடித்து முடியாமல் திணறுவதால் இப்பொழுது  டிஆர்பி சுத்தமாகவே இல்லாத ரொமான்டிக் சீரியலை ஊற்றி மூட முடிவெடுத்துள்ளது.

600 எபிசோடுகளை கடந்து ஒளிபரப்பாகும் ‘தென்றல் வந்து என்னை தொடும்’ என்ற சீரியலின் இரண்டாவது சீசன் விஜய் டிவியின் மதிய நேரத்தில் ஒளிபரப்பாகிறது. இந்த சீரியலில் முதல் சீசனில் காதல் ஜோடிகளாக இருந்த வெற்றி- அபி இருவரும், இரண்டாவது சீசனில் எலியும் பூனையும் போல் எதிரும் புதிருமாக இருந்தனர்.

கலெக்டராக இருக்கும் அபி, பொறுக்கியாக இருக்கும் வெற்றியை எப்படியாவது கம்பி எண்ண வைக்க வேண்டும் என கங்கணம் கட்டிக் கொண்டிருந்தார். ஆனால் இவர்களுக்குள் இருக்கும் காதல் அவ்வப்போது வெளிப்பட்டு கண் கூசும் அளவுக்கு ரொமான்ஸ் செய்தனர்.

குறிப்பாக நடுக்கடலில் மாட்டிக் கொண்ட அபி- வெற்றி இருவரின் செல்ல சண்டை காட்சி, அதன் தொடர்ச்சியாக அபிக்கு சிலம்பம் கற்றுத் தருவதாக வெற்றி செய்த சேட்டை இவை எல்லாம் சின்னத்திரை ரசிகர்களை குதூகலப்படுத்தியது. இருப்பினும் இந்த சீரியலுக்கு எதிர்ப்பார்த்த அளவு டிஆர்பி கிடைக்காததால் இப்போது கிளைமாக்ஸ் காட்சியை அதிரடியாக ஒளிபரப்பு செய்கின்றனர்.

இதில் நெகட்டிவ் கேரக்டர்களான கண்மணி மற்றும் பரமு இருவரையும் கையும் களவுமாக கலெக்டர் அபி பிடிக்கப் போகிறார். இதற்கு வெற்றி உறுதுணையாக நின்று  கடைசியில் இருவரும் சேர போகின்றனர். இந்த சீரியலை இந்த வார இறுதியில் முடித்துவிட்டு அடுத்த வாரத்திலிருந்து ‘நீ நான் காதல்’ என்ற புத்தம் புது சீரியலை விஜய் டிவி துவங்க போகிறது.

இந்த புத்தம் புது சீரியலில் சிடு மூஞ்சியாக இருக்கும் கதாநாயகன் மற்றும் பேரன்பிற்கு பஞ்சம் இல்லாத கதாநாயகி இருவரையும் மையமாக வைத்து கதையை உருட்ட போகின்றனர். இதாவது விஜய் டிவியின் டிஆர்பியை தூக்கி விடுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

- Advertisement -

Trending News