வெள்ளிக்கிழமை, டிசம்பர் 13, 2024

ஜோடி நம்பர் 1ல ஃபெலினா, பிக் பாஸ் வீட்ல ரவீனாவா.? மன்மதக் குஞ்சு செய்யும் திருட்டுத்தனம்

Bigg Boss Season 7 Controversy: சிலர் ஜெயிப்பதற்காக எந்த அளவுக்கு வேணாலும் இறங்குவார்கள் என கேள்விப்பட்டிருக்கோம், ஆனா இப்போது பிக் பாஸ் சீசன் 7 வீட்டில் அதைக் கண்கூடாக பார்க்கிறோம். ஏற்கனவே இந்த மன்மத குஞ்சு ஜோடி நம்பர் 1 நிகழ்ச்சியில் கப்ப ஜெயிக்கணும்னு ஃபெலினாவை பயன்படுத்தினார்.

இப்போது பிக் பாஸ் வீட்டில் ரவீனாவை பகடைக்காயாய் உருட்டி சீசன் 7 டைட்டில் வின்னர் ஆக வேண்டும் என்று கேவலமாக பிளான் போட்டுள்ளார் . தொடக்கத்தில் இருந்தே மணி ரவீனாவின் பின்னாடியே சுற்றி அவர காதலிப்பது போல் காண்பித்தார். இதைப் புரிந்து கொண்ட ரவீனா அவரை அண்ணா என்று அழைத்து அவர்களுக்குள் காதல் இல்லை என்பதை பிக் பாஸ் வீட்டில் இருப்பவர்களுக்கு சொன்னார். ஆனால் நேற்று, ‘நான் ரவீனாவை காதலிக்கிறேன் என்று 6 வருட தோழியான ஐஷூவிடம் மணி போட்டுடைத்து விட்டார்.

‘எதற்காக நம்ம ரெண்டு பேரும் காதலிக்கிறோம்’ என்று ஐஷூவிடம் சொன்ன என்று ரவீனா மணியை திட்டுவதும், மணி அழுவது போல் டிராமா போட்டார். அதை பார்க்க முடியாமல் ரவீனாவும் நேற்று இரவு அழுதார். இனிமே பிக் பாஸ் வீட்டில் இவங்க ரெண்டு பேரும் தான் லவ் கன்டென்ட் கொடுத்து ஆடியன்ஸ் கவனத்தை ஈர்க்கப் போறாங்க. மக்களை உஷாரா இருங்க! இந்த மணி, ஏற்கனவே ஜோடி நம்பர் 1 சீசன் 9 டைட்டிலை வெல்ல வேண்டும் என்று தன்னுடைய ஜோடி ஃபெலினாவை காதலிப்பதாக சிம்பத்தி கிரியேட் பண்ணி டைட்டிலை வென்றார்.

இப்போது பிக் பாஸிலும் அதே திருட்டுத்தனத்தை தான் செய்யப் பார்க்கின்றார். ரவீனா- மணி இருவரும் டான்சர்ஸ் என்பதால் இவர்களுக்குள் ஏற்கனவே பழக்கம் இருந்தது. பிக் பாஸ் வருவதற்கு முன்பே இருவரும் வெளிநாடுகளில் ஊர் சுற்றி நெருக்கமாக இருந்த சோசியல் மீடியாவிலும் ஏகப்பட்ட புகைப்படங்களை வெளியிட்டு சர்ச்சையை கிளப்பினர்.

இப்போது பிக் பாஸ் வீட்டிலும் தங்களை காதல் ஜோடி என்பதை உறுதிப்படுத்தி மொத்த ஆடியன்ஸ் கவனத்தையும் தங்கள் பக்கம் திரும்ப பார்க்கின்றனர. இதைப் புரிந்து கொண்ட பிரதீப் நேற்று ரவீனாவிடம் ‘சொல்லி இருந்தா நானே உன்னை காதலிக்கிற மாதிரி லவ் கன்டென்ட் கொடுத்திருப்பேனே’ என சீண்டி விட்டார்.

இதைக் கேட்டதும் உஷாரான மணி, எங்கடா ரவீனாவை பிரதீப் கரெக்ட் பண்ணி விடுவாரோ என்று, உடனே ஐஷூவிடம், ‘ரவீனா என்னுடைய லவ்வர் தான்’ என்பதை போட்டுடைத்தார். ஆனா ஜோடி நம்பர் 1ல் ஜெயித்த பிறகு ஃபெலினாவை எப்படி கழட்டி விட்டாரோ அதேபோல் பிக் பாஸிலும் ரவீனாவை காதலிப்பது போல் கன்டென்ட்டுக்காக நடித்து கழட்டி விட்டுவிடுவார்.

- Advertisement -

Trending News