டாப் நடிகர்களை தாண்டி அடுத்த வரிசையில் இருக்கும் 5 பி-கிரேடு ஹீரோக்கள்.. மோட்டார் மோகனை பின்னுக்கு தள்ளிய ஆக்டர்

5 B-grade heroes: என்னதான் முன்னணி நடிகர்கள் என்று பல நடிகர்கள் இருந்தாலும், காலத்திற்கு ஏற்ப சில புது இளம் நடிகர்கள் சினிமாவிற்குள் நுழைந்து மக்கள் மனதில் இடம் பிடித்து விடுவார்கள். அப்படி சமீப காலத்தில் அசுர வளர்ச்சியை அடைந்து தொடர்ந்து வெற்றி நடை போட்டு சில நடிகர்கள் வருகிறார்கள். அப்படி இருக்கும் நடிகர்களை பற்றி தற்போது பார்க்கலாம்.

கவின்: என்னதான் சின்னத்திரையில் நடித்து ரசிகர்களை வென்றாலும், பிக் பாஸ் தான் இவருக்கு ஒரு வெற்றி படிக்கட்டாக மாறியது. அதன் பின் இவர் நடிக்கும் படங்கள் அனைத்திற்கும் மக்களிடமிருந்து அமோக வரவேற்பு கிடைத்தது. அந்த வகையில் தற்போது இவர் நடிக்கும் படங்கள் அனைத்துமே அதிக அளவில் வசூலை பெற்று விடுகிறது. இதனால் தொடர்ந்து பல வாய்ப்புகளை கையில் வைத்துக் கொண்டு பிஸியாக நடித்து வருகிறார். அதில் தற்போது ஸ்டார் மற்றும் கிஸ் படங்களில் கமிட் ஆயிருக்கிறார்.

ஹரிஷ் கல்யாண்: பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். அதன்மூலம் பல படங்களில் நடித்து ரொமான்டிக் ஹீரோவாகவும் சாக்லேட் பாயாகவும் இளசுகளின் மனதில் புகுந்து விட்டார். அந்த வகையில் தற்போது பார்க்கிங், 100 கோடி வானவில், டீசல், ரப்பர் பந்து போன்ற நான்கு படங்களில் பிசியாக நடித்துக் கொண்டு வருகிறது. சமீபத்தில் தான் இவருக்கு திருமணம் ஆனது. ஆனாலும் பெண்களிடம் இருந்த மவுஸ் குறையாமல் ரொமான்டிக் ஹீரோவாக வலம் வருகிறார்.

ஆர்ஜே பாலாஜி: ஆரம்பத்தில் ரேடியோ ஜாக்கியாக நுழைந்து பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி அதன் மூலம் பிரபலமானார். இதை வைத்துக் கொண்டு படங்களில் ஒரு சில கேரக்டர்களில் நடித்து வந்தார். அதன் பின் இவருக்கு கிடைத்த வரவேற்பை புரிந்து கொண்டு படங்களில் ஹீரோவாகவும் நடிக்க ஆரம்பித்து விட்டார். அந்த வகையில் இவருடைய நடிப்பு எதார்த்தமாகவும் நக்கல் நையாண்டி உடனும் இருப்பதால் ரசிகர்கள் விரும்பி பார்க்க ஆரம்பித்து விட்டார்கள். இதன் மூலம் தொடர்ந்து ஹீரோவாக நடிப்பதற்கு முயற்சி எடுத்து வருகிறார்.

மணிகண்டன்: அதாவது ஒரு சிலரை பார்த்ததும் பிடிக்காது பார்க்க பார்க்க தான் பிடிக்கும் என்று சொல்வார்கள். அதுபோலத்தான் இவரும், இவருடைய நடிப்பு பார்த்ததும் அந்த அளவிற்கு டக்குனு மக்களிடம் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. ஆனால் போகப் போக இவருடைய படங்களை பார்க்க ஆரம்பித்ததும் இவரை தூக்கிக் கொண்டாடும் அளவிற்கு எக்கச்சக்கமான ரசிகர்கள் மனதில் இடம் பிடித்து விட்டார்.  அத்துடன் குட்நைட் படத்தில் எதார்த்தமான நடிப்பை கொடுத்ததினால் மோட்டார் மோகன் என்று அடையாளத்தையும் வாங்கிக் கொண்டார்.

பிரதீப்: ஆரம்பத்தில் கோமாளி படத்தை எடுத்து இயக்குனர் என்ற பெயருடன் சினிமாவிற்குள் உலா வந்தவர். அதன்பின் லவ் டுடே படத்தில் இயக்குனராகவும், ஹீரோவாகவும் மாறி மக்களிடத்தில் சரியான அங்கீகாரத்தை பெற்று விட்டார். இதன் மூலம் தொடர்ந்து ஹீரோவாகவே பயணிக்கலாம் என்று முடிவெடுத்து அடுத்தடுத்த படங்களில் நடிப்பதற்கு கமிட் ஆகி வருகிறார். அந்த வகையில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் ஹீரோவாக நடிக்கப் போகிறார். தற்போது இவருடைய நடிப்பை பார்த்த மக்கள் மற்ற இளம் நடிகர்களின் நடிப்பை மறந்து விட்டார்கள். முக்கியமாக மோட்டார் மோகன் மணிகண்டனுக்கு இருந்த வரவேற்பை சுக்கு நூறாக உடைத்து அவரைப் பின்னுக்கு தள்ளி விட்டார்.