ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 15, 2024

மானாவாரியாக லிப் லாக் கொடுத்த ராஷ்மிகா.. கோடிகளை கொட்டிய அனிமல் தயாரிப்பாளர்

Actress Rashmika: நேஷ்னல் கிரஷ்ஷாக இருக்கும் ராஷ்மிகா இப்போது பாலிவுட் பக்கம் தன் கவனத்தை திருப்பி இருக்கிறார். சந்தீப் ரெட்டி இயக்கத்தில் ரன்பீர் கபூர், அனில் கபூர் ஆகியோர் நடித்திருக்கும் அனிமல் படத்தில் இவர்தான் ஹீரோயின். இதன் டீசர் அண்மையில் தான் வெளியானது.

அதை பார்த்ததுமே ரசிகர்கள் ரிலீஸ் தேதியை எண்ண ஆரம்பித்து விட்டனர். அந்த அளவுக்கு இதில் ராஷ்மிகா, ரன்பீர் கபூருடன் ஓவர் நெருக்கம் காட்டி நடித்துள்ளார். அது மட்டுமல்லாமல் இப்படத்தின் பாடல்களும் அடுத்தடுத்து வெளிவந்து கொண்டிருக்கிறது. அதில் இந்த ஜோடியின் லிப்லாக் காட்சிகள் தான் வைரலாகி வருகிறது.

ஒரு பானைக்கு ஒரு சோறு பதம் என்பது போல் இந்த காட்சியே படத்தில் ஏகப்பட்ட கிளுகிளுப்பு காட்சிகள் இருக்கும் என்பதையும் உறுதிப்படுத்தி இருக்கிறது. அதிலும் ராஷ்மிகா மானாவாரியாக கணக்கில்லாமல் லிப்லாக் சீனில் நடித்து தள்ளி இருக்கிறாராம். இதை மட்டும் அவருடைய காதலர் விஜய் தேவரகொண்டா பார்த்தால் நெஞ்சு வலி வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை.

ஆனால் குஷி படத்தில் இவர் சமந்தாவுடன் ஓவர் நெருக்கம் காட்டியதால் தான் பதிலுக்கு இவர் இப்படி தாராளம் காட்டியதாகவும் திரை உலகில் கிசுகிசுக்கப்பட்டு வருகிறது. இந்த சூழலில் அனிமல் படத்துக்கு ராஷ்மிகா வாங்கிய சம்பளம் பற்றிய தகவலும் வெளியாகி ஆச்சரியத்தை கிளப்பியுள்ளது.

ஏனென்றால் வாரிசு படத்துக்காக மூன்று கோடி ரூபாய் சம்பளம் வாங்கிய இவர் இப்படத்திற்காக நான்கு கோடி ரூபாய் வாங்கி இருக்கிறார். எதற்காக இவருக்கு அதிக சம்பளம் கொடுக்கப்பட்டது என்பதை சொல்லி தெரிய வேண்டியது இல்லை. எதிர்பார்த்ததற்கும் மேலாக இவர் நடித்துக் கொடுத்ததாலேயே தயாரிப்பாளரும் கொட்டி கொடுத்துள்ளாராம்.

அந்த வகையில் ஹீரோவுக்கு அப்பாவாக நடித்திருக்கும் மூத்த நடிகர் அனில் கபூருக்கே இரண்டு கோடி தான் சம்பளம் கொடுக்கப்பட்டிருக்கிறது. அப்படி இருக்கும் போது உச்சகட்ட கவர்ச்சியை காட்டி சம்பளத்தை உயர்த்தி இருக்கும் ராஷ்மிகா தொடர்ந்து பாலிவுட்டில் கவனம் செலுத்தி வெற்றி கொடியை நாட்ட திட்டமிட்டுள்ளாராம்.

லிப்லாக் காட்சியில் நடித்த ராஷ்மிகாவுக்கு சம்பளத்தை வாரி இறைத்த தயாரிப்பாளர்.

- Advertisement -

Trending News