திங்கட்கிழமை, ஜனவரி 6, 2025

விடாமல் புடிச்சு தொங்கும் லியோ பட தயாரிப்பாளர்.. தலைவலியில் விஜய், லோகேஷ்

Leo FDFS: தமிழ்நாட்டில் இதுவரை இல்லாத அளவிற்கு விஜய் நடித்த லியோ படத்திற்கு அதிக கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இருக்கிறது. இதற்கு முன் நடந்த கசப்பான சம்பவங்கள் தான் இதற்கு காரணம். அதிலும் துணிவு பட ரிலீஸ் இன் போது அஜித்தின் ரசிகர் ஒருவர் எதிர்பாராத விபத்தில் இறந்தது முதல் இதுவரை எந்த படங்களுக்கும் அதிகாலை காட்சி கிடையாது என தமிழக அரசு முடிவெடுத்து விட்டது.

லியோ படத்தின் தயாரிப்பாளர் மத்திய அரசுக்கு கோரிக்கை கடிதம் ஒன்று எழுதி இருந்தார். அதில் லியோ சிறப்பு காட்சிக்கு அனுமதி வழங்க வேண்டும் என கேட்டிருந்தார். மத்திய அரசும், ஐந்து சிறப்பு காட்சிகளுக்கு அனுமதி அளித்து கடிதம் அனுப்பி இருந்தது. இருந்த போதும் இந்த ஐந்து காட்சிகளில் அதிகாலை காட்சி இருக்கிறதா என்ற சந்தேகம் எல்லோருக்கும் இருந்தது.

நேற்று தமிழக அரசு, லியோ படத்திற்கு அதிகாலை காட்சி கிடையாது என்று திட்டவட்டமாக சொல்லிவிட்டது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர் படத்திற்கும் இதுபோன்ற பல அனுமதி கடிதங்கள் அனுப்பப்படும், அதிகாலை காட்சிக்கு அனுமதி கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இருந்தாலும் லியோ படத்தின் தயாரிப்பாளர் இந்த பிரச்சனையை விடுவதாக இல்லை.

லியோவுக்கு அதிகாலை காட்சி வழங்கி ஆக வேண்டும் என்ற முடிவில் இருக்கிறார் தயாரிப்பாளர் லலித். இதனால், இன்று அவர் அதிகாலை காட்சிக்கு அனுமதி கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருக்கிறார். படம் ரிலீஸ் ஆக இன்னும் சில நாட்களே இருப்பதால், கண்டிப்பாக இது அவசர வழக்காக இன்று அல்லது நாளைக்குள் விசாரிக்கப்பட்டு தீர்ப்பு வழங்கப்படும்.

ஏற்கனவே ரோகிணி தியேட்டர் விஷயத்தில் உயர் நீதிமன்றம் உச்சகட்ட கோபத்தில் இருப்பதாக செய்திகள் வெளியானது. இதனால் கண்டிப்பாக இந்த வழக்கை விசாரிக்கும் பொழுது இந்த சம்பவம் பெரிய அளவில் பேசப்படும். மேலும் இதை முன்னுதாரணமாக காட்டி, லியோ படத்திற்கு அதிகாலை காட்சிகள் மறுக்கப்படவும் அதிக வாய்ப்பு இருக்கிறது.

அதே நேரத்தில், மற்ற படங்களின் தயாரிப்பாளர்கள் யாருமே இந்த அளவுக்கு அதிகாலை காட்சிக்காக முயற்சி செய்யவில்லை. ஆனால் லியோ படத்தின் தயாரிப்பாளர், இந்த அளவுக்கு கடும் முயற்சி எடுத்து இருப்பதால், ஒருவேளை சென்னை உயர்நீதிமன்றம் அதையெல்லாம் கருத்தில் கொண்டு, அதிகாலை காட்சிக்கு அனுமதி வழங்கவும் வாய்ப்பு இருக்கிறது.

Trending News