வியாழக்கிழமை, டிசம்பர் 12, 2024

கேப்டன் கருப்பா இருக்காரு, திமிருடன் நடிக்க மறுத்த நடிகை.. ஓவர் பேச்சு, கடைசியில் வடிவேலுக்கு ஜோடியான அவமானம்

80’s actress: 80களில் தமிழ் சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமான கேப்டன் விஜயகாந்த் உடன் அந்த சமயத்தில் டாப் நடிகைகளாக இருந்த சிலர் நடிக்க முடியாது என அவமானப்படுத்தினார்கள். ஆனால் அதையெல்லாம் கேப்டன் கொஞ்சம் கூட கண்டு கொள்ளவில்லை. அப்படி அவமானப்படுத்திய நடிகைகள் ஒருவர் பின்னாளில் ஓவர் திமிருடன் பேசி கடைசியில் வடிவேலுவுடன் தான் ஜோடி போட வேண்டியதாயிற்று.

விஜயகாந்த் கருப்பா இருக்காரு, அவருடன் நடிக்க முடியாது என நடிகை அம்பிகா அவருடைய மூஞ்சிக்கு நேராகவே பேசி திமிரு காட்டினார். இவர் மட்டுமல்ல பல நடிகைகளும் அவருடன் நடிக்க மாட்டேன் என சொல்லுவார்கள். கேப்டன் டாப் நடிகராக வந்த போது அம்பிகா பட வாய்ப்பு இல்லாமல் தவித்துக் கொண்டிருந்தார்.

விஜயகாந்த் இடம் சென்று பட வாய்ப்பு கேட்டிருக்கிறார். ஆனால் கடைசியில் அம்பிகா வடிவேலுவுடன் ஜோடி போடுவதற்கும் வாய்ப்பு கேட்டு கெஞ்சி இருக்கிறார். இரண்டு படங்களில் அவருடன் ஜோடியாக இணைந்தும் நடித்திருக்கிறார்.

இதற்கு காரணத்தில் டாப் நடிகையாக இருந்த போது அம்பிகா கொஞ்சநஞ்ச ஆட்டமா போட்டாரு. ஆனா கடைசியில் வடிவேலுவுடன் இணைந்து நடித்த போது இவர்கள் இருவரையும் வைத்து கிசு கிசுவும் வந்தன. இதற்கு காரணம் அந்த சமயத்தில் அம்பிகாவிற்கு இரண்டு முறை விவாகரத்து ஆனதும் தான்

அம்பிகா சினிமாவில் நடித்துக் கொண்டிருந்தபோது பிரேம்குமார் மேனனை திருமணம் செய்து கொண்டு அமெரிக்காவில் குடியேறினார். இந்த தம்பதியர்களுக்கு இரண்டு மகன்கள் இருந்த நிலையில், கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்றனர். பின்பு அடுத்த வருடமே நடிகர் ரவிகாந்தை கல்யாணம் செய்து கொண்டார்.

அவருடனும் இரண்டு வருடம் மட்டுமே சேர்ந்து வாழ்ந்து பின்பு விவாகரத்து பெற்றுவிட்டு இப்போது தன்னுடைய மகன்களுடன் சென்னையில் வசித்து வருகிறார். அம்பிகா சினிமாவில் பீக்கில் இருந்த சமயத்தில் ஓவரா திமிருடன் நடந்து கொண்டதால்தான், ஒரு கட்டத்தில் தமிழ் சினிமா அவரை ஓரம் கட்ட ஆரம்பித்தது. தற்போது அவர் சீரியலில் நடித்து வருகிறார் என்று டாக்டர் கந்தராஜ் சமீபத்திய பேட்டி தெரிவித்துள்ளார்.

- Advertisement -

Trending News