No glamour Actress: பொதுவாக சினிமாவில் நுழைந்து விட்டாலே தாறுமாறாக நடிக்க வேண்டியதாக இருக்கும். சில காட்சிகளுக்கு ஏத்த மாதிரி கிளாமராகவும் நடிக்க வேண்டிய கட்டாயம் வந்து விடும் என்று பலரும் சொல்லி நாம் கேள்விப்பட்டிருப்போம். ஆனாலும் இதையெல்லாம் தகர்த்து எறிந்து கிளாமர் இல்லாமலே சில நடிகைகள் முன்னணி ஹீரோயினாக வந்திருக்கிறார்கள்.
அதிலும் நதியா குடும்ப குத்து விளக்காக நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்திருக்கிறார். அதேபோல இன்னொரு நடிகையும் கிளாமர் ரூட்டுக்கு போகாமல் நதியாவை அப்படியே பாலோ பண்ணி பல படங்களில் வெற்றி அடைந்திருக்கிறார். அவர் வேறு யாருமில்லை 90ல் வலம் வந்த நடிகை சங்கீதா தான்.
ஆரம்பத்தில் மலையாள படங்களில் நடித்து வந்த இவர் தமிழில் என் ரத்தத்தின் ரத்தமே என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். அதன் மூலம் எல்லாமே என் ராசாதான், சீதனம், காலம் மாறிப்போச்சு, பூவே உனக்காக, நம்ம ஊரு ராசா போன்ற பல படங்களில் நடித்து வெற்றி ஹீரோயினாக வந்தார்.
அத்துடன் இவர் நடித்த படங்கள் அனைத்துமே சூப்பர் ஹிட் ஆகி இவருக்கு ரசிகர்கள் நல்ல வரவேற்பை கொடுத்தார்கள். ஆனாலும் கிளாமர் கேரக்டரில் நடிக்க மாட்டேன் என்று ஒரு முடிவுடன் இருந்து குடும்பப் பெண்ணாக நடித்துக் காட்டியிருக்கிறார். அதுவே இவருடைய படங்களுக்கு மிகப்பெரிய பிளஸ் பாயிண்ட் ஆகவும் அமைந்தது.
அதே மாதிரி விஜய்யுடன் ஜோடி சேர்ந்து பூவே உனக்காக படத்தில் நடித்த பொழுது
அஜித் படமான காதல் கோட்டை படத்தில் நடிப்பதற்கு வாய்ப்பு வந்தது. ஆனால் அப்பொழுது இவருக்கு இருந்த கால் சீட் பிரச்சனையால் அஜித் படத்திற்கு நோ சொல்லிவிட்டார். அதே மாதிரி அப்போதைய படங்களில் விஜய் ரொம்பவே கிளாமராக ரொமான்டிக் படங்களில் அதிகம் நடித்திருப்பார்.
முக்கியமாக அப்போ உள்ள படங்களில் ஹீரோயினுடன் நெருக்கமாகவும், கட்டிப்பிடித்து கிஸ் அடிக்கும் காட்சிகளில் அதிகம் விஜய் நடித்து ஆம்பள சகிலா என பெயர் வாங்கினார். இருந்தபோதிலும் இவர் படங்களில் நடிக்கும் வாய்ப்பை பெற்றும் அந்த மாதிரி காட்சி எதுவும் நடிக்காமல் குடும்பப் பெண்ணாகவே நடித்து வெற்றி அடைந்திருக்கிறார்.