Vijay in Thalapathy: நிற்காமல் ஓட வேண்டும் என்பதற்கு ஏற்ற மாதிரி விஜய் கொஞ்சம் கூட ரெஸ்ட் எடுக்காமல் தொடர்ந்து படங்களில் நடித்துக் கொண்டே வருகிறார். அதாவது லோகேஷ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள லியோ படம் நாளை ரிலீசுக்கு தயாராகி இருக்கிறது. அதற்குள் இவருடைய அடுத்த படமான 68வது படத்திற்கான படப்பிடிப்பை ஆரம்பித்து விட்டார். இப்படத்தை வெங்கட் பிரபு இயக்கி ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கிறது.
மேலும் இப்படத்தில் விஜய்யை யூத் ஆக காட்டுவதற்கு டெக்னாலஜி மூலம் வேலை நடந்து இருக்கிறது. அதனால் தளபதி 68 படத்தில் விஜய் 25 வயது இளைஞனாக ஜொலிக்கப் போகிறார். அதற்காக லாஸ் ஏஞ்சல்ஸ் நகரத்திற்கு சென்று DE-Ageing தொழில்நுட்பத்தை பயன்படுத்தி இருக்கிறார். இவருக்கு மட்டுமில்லாமல் இப்படத்தில் இரண்டாவது ஹீரோவாக நடிக்கும் பிரசாந்திற்கும் இதே டெக்னாலஜியை பயன்படுத்தி வயசை குறைத்து இருக்கிறார்.
அந்த வகையில் தான் பிடித்த முயலுக்கு மூணு கால் தான் என்று பிரஷாந்த் ஹீரோவாக மட்டும் தான் நடிப்பேன் என்று பிடிவாதமாக இருந்தார். அதனால் வெங்கட் பிரபு வேற வழி இல்லாமல் பிரசாந்துக்கு செகண்ட் ஹீரோ கதாபாத்திரத்தை கொடுத்து விட்டார். ஆக மொத்தத்தில் இப்படத்தில் இரண்டு ஹீரோக்கள் நடிக்கப் போகிறார்கள்.
மேலும் விஜய் கடந்த எட்டு மாதங்களாக ஆக்சன் சண்டை என ரத்த காட்டேரி படத்தில் நடித்து வந்த இவர் தற்போது வெங்கட் பிரபு இயக்குனருடன் கூட்டணி வைப்பது அவருக்கு மிகவும் ரிலாக்ஸேசனை கொடுத்திருக்கிறது. ஏனென்றால் வெங்கட் பிரபு படம் காமெடியாகவும், கமர்சியலாகவும் தான் இருக்கும். இருந்தாலும் இப்படத்தில் ஆறு சண்டை காட்சிகள் இருக்கிறதாம்.
அந்த வகையில் இப்படத்தை 90s கிட்ஸ்க்கு ஏற்ற மாதிரி கொடுக்க வேண்டும் என்ற தீர்மானத்தில் வெங்கட் பிரபு பல வேலைகளை உண்ணிப்புடன் பார்த்து வருகிறார். மேலும் இப்படத்திற்கு கூடுதலாக டான்ஸ் வைத்து கவர வேண்டும் என்பதற்காக டான்ஸ் மாஸ்டர் பிரபு தேவா இதில் களம் இறங்குகிறார்.
ஏற்கனவே விஜய் மற்றும் பிரசாந்த் டான்ஸ் எந்த அளவிற்கு இருக்கும் என்பது நாம் அனைவருக்கும் தெரிந்த விஷயமே. இதுல பிரபுதேவா மாஸ்டர் இணைந்து இருக்கிறார் என்றால் கண்டிப்பாக பட்டைய கிளப்ப போகிறது. ஆக மொத்தத்தில் தளபதி 68 படம் ரசிகர்களுக்கு மிகப்பெரிய ட்ரீட்டாக அமையப் போகிறது.