நடிகை ஆரம்பத்தில் கதாநாயகியாக வாய்ப்பு கிடைக்காத நிலையில் ஹீரோயின்களின் தோழியாக நடித்து வந்தார். அதன் பிறகு அவரது நடிப்பு திறமையை பார்த்து ஹீரோயின் வாய்ப்பு வர அதை கெட்டியாக பிடித்துக் கொண்டு டாப் நடிகர்களுடன் ஜோடி போட்டு நடிக்க ஆரம்பித்தார். அவர் நடிக்கும் படங்கள் எல்லாமே சூப்பர் டூப்பர் ஹிட் ஆக தொடங்கியது.
ஆகையால் அடுத்தடுத்த படங்களில் இயக்குனர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் இந்த நடிகையை கதாநாயகியாக போட அவரது மார்க்கெட் உச்சத்தை தொட்டது. ஒருபுறம் நடிப்பில் கைதேர்ந்தவர் ஆக இருந்தாலும் மற்றொருபுறம் நடிகைக்கு சில கெட்ட பழக்கங்களும் இருக்கிறது. அதில் மோசமாக குடிக்கு அடிமையாகி இருக்கிறார்.
இதனால் விடுமுறை நாட்களில் பப், பார்ட்டி சென்றால் கண்டிப்பாக நடிகையை பார்க்கலாம். மேலும் இவருடைய மதுப்பழக்கம் இருப்பது ஊர், உலகம் தெரியும் அளவுக்கு மோசமாக மாறிவிட்டது. ஒரு நாள் ஓவராக குடித்துவிட்டு ரோட்டிலேயே மட்டையாகி விழுந்து விட்டாராம். அப்போது செய்தியாளர்கள் அதை படம் பிடித்து பரவிவிட்டு விட்டனர்.
மேலும் அந்தச் சமயத்தில் அந்த வழியாக வந்த மாஸ் ஹீரோ ஒருவர் நடிகையின் நிலைமையை பார்த்து விட்டு அவரை வீட்டுக்கு அழைத்துச் சென்று விட்டிருக்கிறார். நிதானமே இல்லாத நிலையில் யார் தன்னை வீட்டில் விட்டார்கள் என்பது கூட நடிகைக்கு தெரியவில்லையாம். மறுநாள் தான் நடந்த அக்கப்போரு எல்லாவற்றையும் செய்தித்தாள் மூலம் நடிகை தெரிந்து இருக்கிறார்.
இதனால் நடிகைக்கு ரொம்ப அசிங்கமாக போய்விட்டது. ஆனாலும் இதுவரை ரகசியமாக வைத்திருந்த விஷயம் இப்போது அம்பலமானதால் நடிகை அதன் பிறகு எல்லாவற்றையும் பப்ளிக்காகவே செய்ய ஆரம்பித்து விட்டார். இதனால் சிறிது காலத்திலேயே அவரது மார்க்கெட் காலியாகி சினிமாவை விட்டு ஒதுங்கி விட்டார்.