Leo 2nd Day Collection: லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் மற்றும் ஏகப்பட்ட திரை பிரபலங்கள் நடிப்பில் ஆயுத பூஜை பண்டிகை முன்னிட்டு அக்டோபர் 19ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி இருக்கிறது லியோ படம். இதுவரை தமிழ் சினிமாவில் இப்படி ஒரு படத்திற்கு எதிர்பார்ப்பு இருந்ததா என்பது கேள்விக்குறி தான். ஆனால் லியோ படம் வெளியாகி இதை சுக்குநூறாக நொறுக்கி உள்ளது.
முதல் நாளில் நிச்சயம் லியோ படம் ஆயிரம் கோடியை தாண்டும் என எதிர்பார்க்கப்பட்டது. அதற்கு கைமேல் பலனாக எதிர்பார்த்ததை விட அதிகமாக முதல் நாளில் வசூலை அள்ளியது. அதாவது லியோ படம் முதல் நாள் கலெக்ஷனில் 148.5 கோடி வசூல் செய்ததாக இப்படத்தின் தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
மேலும் இதே அளவு இரண்டாம் நாளான நேற்று லியோ படம் வசூலித்திருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் நிலைமை அப்படியே தலைகீழாக மாறி இருக்கிறது. அதாவது முதல் நாளில் லியோ படத்திற்கு சில நெகட்டிவ் விமர்சனங்கள் வர தொடங்கியது. முதல் பாதையில் உள்ள சுவாரஸ்யம் இரண்டாம் பாதியில் இல்லை என்று விமர்சனங்கள் எழுந்தது.
அதோடு மட்டுமல்லாமல் லியோ படத்தின் இரண்டாம் பாதியை லோகேஷின் உதவி இயக்குனர் ரத்னகுமார் அல்லது சென்ட் மாஸ்டர் அன்பறிவு இவர்களுள் ஒருவர் தான் இயக்கி இருக்க வாய்ப்பு இருக்கிறது என்று கூறியுள்ளனர். இந்த சூழலில் இரண்டாம் நாள் லியோ வசூல் வெளியாகி பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
அதாவது இப்போது நமத்து போன பட்டாசாக லியோ படம் மாறி இருக்கிறது. அதன்படி உலகம் முழுவதும் கிட்டத்தட்ட 40 கோடியில் இருந்து 45 கோடிக்குள் தான் இரண்டாம் நாள் வசூல் செய்திருக்கிறது. இதைவிட முதல் நாளில் மூன்று மடங்கு வசூலை பார்த்த தயாரிப்பாளருக்கு இந்த வசூல் மிகவும் ஏமாற்றத்தை கொடுத்திருக்கிறது.
அதோடு மட்டுமல்லாமல் வருகின்ற நாட்கள் பூஜை விடுமுறையால் லியோ படத்தின் வசூல் அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் ஒட்டுமொத்தமாக லியோ படம் 180 கோடியில் இருந்து 185 கோடி வரை வசூல் செய்திருக்கிறது. இதில் வெளிநாடுகளில் மட்டும் 30 கோடியில் இருந்து 35 கோடி வரை வசூல் செய்திருக்கும் என்று கூறப்படுகிறது.