15 வயதில் துணை நடிகையாக சினிமாவிற்கு அறிமுகமாகி, அதன் பின் உச்சம் பெற்று, 90களில் திரையுலகை கலக்கியவர் தான் இந்த கவர்ச்சி புயல். இவருடைய படம் ரிலீஸ் ஆகிறது என்றால் டாப் நடிகர்களின் படங்கள் பின் வாங்கிய சம்பவம் எல்லாம் நடந்திருக்கிறது.
அந்த அளவிற்கு இவருடைய படங்களில் மோசமான படுக்கையறை காட்சிகளுக்கும் கவர்ச்சி நடனங்களுக்கும் பஞ்சமில்லாமல் இருக்கும். ஒட்டுமொத்த தென்னிந்திய ரசிகர்களையும் இரவு நேரத்தில் இன்பமாக்கிய இந்த நடிகை, சமீபத்திய பேட்டியில் குடும்ப ரகசியத்தை அவிழ்த்து விட்டார்.
அதில் இவர் தன்னுடைய வாழ்க்கையில் செய்த மிகப்பெரிய தவறை பகிரங்கமாகவே ஒத்துக்கொண்டார். 16 வயதில் ஆண் நண்பரின் ஆசை வார்த்தையால் மயங்கி, அவருடன் பலமுறை படுக்கையை பங்கு போட்டு இருக்கிறார். பின்பு அவருக்கே தெரியாமல் கர்ப்பம் ஆகிவிட்டார்.
நடிகையின் வயிற்றைப் பார்த்து சந்தேகப்பட்ட அவருடைய அம்மா மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று இருக்கிறார். பின்பு நடிகை கர்ப்பமாக இருப்பது உறுதி செய்ய அங்கேயே கருக்கலைப்பு செய்தனர். இதுதான் அந்த நடிகை செய்த மிகப்பெரிய தவறு என்று வருந்துகிறார்.
அவருடைய அம்மாவும் அந்த நடிகையை வாழ வேண்டிய நேரத்தில் வாழவிடாமல் பணத்திற்காக ஆசைப்பட்டு தொடர்ந்து மோசமான கவர்ச்சிப் படங்களில் நடிக்க வைத்துள்ளார். ஒருவேளை அந்த குழந்தையை கலைக்காமல் இருந்திருந்தால் அந்த ஆண் நண்பரை திருமணம் செய்து கொண்டு நடிகையின் வாழ்க்கை வேறு விதமாக போயிருக்கும்.
ஆனால் கிளாமர் நடிகையாக தொடர்ந்து நடித்து தன்னுடைய குடும்பத்திற்கு சம்பாதித்து கொடுத்து கடைசியில் அந்த நடிகை இப்போது தனி மரம் ஆகிவிட்டார். அவருடைய மார்க்கெட் சரிய துவங்கியதும் மொத்த குடும்பமும் அம்போன்னு விட்டுட்டு போய்ட்டாங்க. இப்போது அந்த நடிகை திருநங்கையை தத்தெடுத்து வளர்த்து வருவதுடன் வாடகை வீட்டில் தான் வாழ்ந்து வருகிறார்.