வெள்ளிக்கிழமை, ஜனவரி 3, 2025

சைக்கோவை கையும் கழுவுமாய் பிடித்த உடன்பிறப்புகள்.. விடுதியாக மாறிய பாண்டியன் ஸ்டோர்ஸ்

Pandian Stores Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் கடந்த அஞ்சு வருஷமாக குடும்பங்களில் நடக்கும் பிரச்சினைகளையும், பாசத்தையும் வைத்து தற்போதைய இளம் தலைமுறைகளுக்கு ஒரு முன் உதாரணமாக காட்டப்பட்டிருந்தது. இடையில் எத்தனையோ சொதப்பல்கள் இருந்தாலும் மற்ற நாடகங்களில் உள்ள மோசமான கதை மாதிரி இல்லாமல், அண்ணன் தம்பிகளின் பாசத்தை காட்டி மக்கள் மனதில் தனித்து நின்று வெற்றி பெற்றது.

அப்படிப்பட்ட இந்த நாடகம் இந்த வாரத்தோடு முடியப்போகிறது. அதனால் முடியும் தருவாயில் வழக்கம்போல் எல்லா கேரக்டர்களும் திருந்தி பாசிட்டிவாக காட்டப்படுகிறது. அதாவது எல்லா பிரச்சனைக்கும் காரணமான சைக்கோ பிரசாந்தை ஜீவா மற்றும் கதிர் தேடி பிடித்து போலீஸிடம் ஒப்படைத்து விடுகிறார்கள்.

அந்த வகையில் இதுவரை மற்றவர்களை கண்கொத்தி பாம்பாக கொத்திக் கொண்டிருந்த முல்லையின் அம்மா தற்போது ரொம்பவே திருந்தி மல்லி வாழ்க்கையை காப்பாற்றியதற்காக ஜீவா, மூர்த்தி, தனத்திடம் கையெடுத்து கும்பிட்டு நன்றியை சொல்கிறார். அடுத்ததாக நான் வளர்த்த என் மகன் இப்படி கெட்ட புத்தியுடன் இருப்பான் என்று நான் நினைச்சு கூட பார்க்கவில்லை.

இது எல்லாத்துக்கும் காரணம் என்னுடைய வளர்ப்பு தப்பு என்று நினைத்து ரொம்பவே பீல் பண்ணி அழுது கொண்டிருக்கும் மல்லிக்கு ஆறுதல் சொல்லி அவரையும் தனம் அவருடைய வீட்டிற்கு கூட்டிட்டு போகிறார். அடுத்ததாக மீனாவின் அப்பா மீதமுள்ள எல்லா சொத்துக்களையும் ஜீவாவிடம் கொடுத்து விடுகிறார். உடனே தனம் வழக்கம் போல் நீங்களும் எங்களுடன் வந்து ஒரே வீட்டில் இருங்கள் என்று கூப்பிடுகிறார்.

ஆக மொத்தத்தில் பாண்டியன் ஸ்டோர்ஸ் வீடு தற்போது சத்திரமாக மாறிவிட்டது. அத்துடன் தனம் அன்னை தெரேசா ஆகவே மாறிவிட்டார். அதாவது கஷ்டத்தில் இருப்பவர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் அடைக்கலம் கொடுத்து வருகிறார். இவருக்கு துணையாக பக்கவாத்தியம் பாடிக்கொண்டிருக்கிறார் மூர்த்தி.

இனி எல்லாரும் ஒரே வீட்டில் இருந்து கூட்டு குடும்பமாய் வாழப் போகிறார்கள். இந்த சந்தோஷத்திலேயே இவர்களுடைய வாழ்க்கைக்கு சுபம் போட போகிறார்கள். அடுத்தபடியாக அப்பா மகன்களுக்கு இருக்கும் பாசத்தை வைத்து சீசன் 2 என்று ஒளிபரப்பாக போகிறது. ஆனால் அதில் தனத்துக்கு பதிலாக நடிகை நிரோஷா நடிக்கிறார். இந்த சீசன் எந்த மாதிரியான கருத்தை முன் வைக்கிறது என்று பார்க்கலாம்.

Trending News