வியாழக்கிழமை, டிசம்பர் 12, 2024

மெடிக்கல் மாபியா கும்பலை ஒழிக்க நயன்தாரா தொடங்கிய அடுத்த புதிய பிசினஸ்.. விக்கியுடன் வைரலாகும் புகைப்படம்

Actress Nayanthara New Business: நடிகை நயன்தாரா கேரளாவை பூர்வீகமாகக் கொண்டவர். அங்குள்ள ஒரு சின்ன தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக வாழ்க்கையை தொடங்கிய இவர் தற்போது பாலிவுட்டில் ஷாருக்கானுக்கு ஹீரோயின் ஆக நடித்திருக்கிறார். கிட்டத்தட்ட 20 வருடங்களுக்கும் மேலாக முன்னணி ஹீரோயின் என்ற இடத்தை தன்வசம் வைத்திருக்கிறார். தன்னுடைய ரசிகர்களால் லேடி சூப்பர் ஸ்டார் என்றும் அழைக்கப்படுகிறார்.

சிறந்த நடிகையாக மட்டுமில்லாமல் இப்போது நயன்தாரா பிசினஸிலும் பட்டையை கிளப்பிக் கொண்டிருக்கிறார். விக்னேஷ் சிவன் உடனான திருமணத்திற்கு முன்பே இவர்கள் இருவரும் இணைந்து இந்தியாவின் பிரபலமான தேநீர் நிறுவனம் சாய் வாலாவில் முதலீடு செய்தார்கள். பின்னர் நயன்தாரா சொந்தமாகவும் பிசினஸ் செய்ய திட்டமிட்டார்.

நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இருவரும் இணைந்து லிப் பாம் கம்பெனியை தொடங்கினார்கள். எந்தவித கெமிக்கலும் இல்லாமல் இயற்கையான முறையில் இந்த லிப் பாம் தயாரிக்கப்படுவதாக சொல்லப்படுகிறது. இந்த தொழிலை தொடர்ந்து கடந்த செப்டம்பர் மாதம் 9 ஸ்கின் என்னும் பெயரில் அழகு சாதன பொருட்களை விற்கும் கம்பெனியை தொடங்கி இருக்கிறார். இதன் தொடக்க விழா துபாயில் பிரம்மாண்டமாக நடைபெற்றது.

இந்த வியாபாரத்தின் முதல் கட்டமாக நயன்தாரா பிரபலங்களுக்கு தன்னுடைய அழகு சாதன பொருட்களை பரிசாக அனுப்பி பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்று வருகிறார். நயன், ஜவான் படத்திற்காகத்தான் இன்ஸ்டாகிராம் ஆரம்பித்தார் என்று சொல்லப்பட்டது. ஆனால் உண்மையில் தன்னுடைய பிசினஸ் வளர்ச்சிக்காக தான் இப்போது சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கிறார்.

சில வாரங்களுக்கும் முன்பு இயற்கை முறையில் உணவு தயாரிக்கும் டிவைன் ஃபுட்ஸ் நிறுவனத்தின் மீது தன்னுடைய முதலீடை செலுத்தினார். தற்போது விஜயதசமி தினத்தன்று நாப்கின் பிசினஸை தொடங்கி இருக்கும் அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறார். இந்த நாப்கின் எந்தவித கெமிக்கலும் இல்லாமல் இயற்கை முறையில் தயாரிக்கப்பட்டு இருப்பதாக சொல்லப்படுகிறது

 கணவர் விக்னேஷ் சிவன் உடன் இணைந்து புதிய தொழிலை தொடங்கிய நயன்தாரா

femi 9
femi 9

இப்போதெல்லாம் நவீன தொழில்நுட்பங்களில் நாப்கின் தயாரிக்கிறேன் என்ற பெயரில் கெமிக்கல் தான் அதில் அதிகமாக உபயோகப்படுத்தப்படுகிறது. இதனால்தான் பெண்களுக்கு கருப்பை வாய் புற்றுநோய் கூட வருகிறது என்று ஆராய்ச்சிகள் சொல்கிறது. இப்படிப்பட்ட ஒரு சூழ்நிலையில் இயற்கை முறையில் நாப்கின் தயாரிக்கும் தொழிலை தொடங்கி இருக்கும் நயன்தாரா, கண்டிப்பாக தற்போது சந்தையில் இருக்கும் மற்ற நாப்கின் தொழில்களை தோற்கடிக்க வாய்ப்பு இருக்கிறது.

- Advertisement -

Trending News