Biggboss 7-Mani-Raveena: பொதுவாக பிக்பாஸ் நிகழ்ச்சிக்குள் வந்தால் தான் ஒரு காதல் ஜோடி உருவாகும். ஆனால் இந்த முறை பிக்பாஸ் வெளியில் காதல் பறவைகளாக சுற்றி திரிந்த ஒரு ஜோடியை வீட்டுக்குள் இழுத்துப் போட்டு இருக்கிறார். அவர்கள் இருவரும் லவ்வர்ஸ் என்ற விஷயம் ஊருக்கே தெரிந்தாலும் எங்களுக்குள் ஒன்றும் இல்லை வெறும் நட்புதான் என்று சாதிக்கிறது அந்த ஜோடி.
அந்த வகையில் மணி, ரவீனாவுக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் இருக்கின்றனர். அதிலும் இவர்கள் இந்த நிகழ்ச்சிக்குள் வருகிறார்கள் என்றதுமே சரியான லவ் கன்டென்ட் கிடைக்கும் என்று பலரும் எதிர்பார்த்தனர். ஆனால் காதலை அம்பலப்படுத்தி விடக் கூடாது என்பதில் தெளிவாக இருந்த இருவரும் இப்போது தடுமாற தொடங்கி இருக்கின்றனர்.
அதில் ரவீனா எந்த விஷயமும் வெளியில் வரக்கூடாது என சரியாக காய் நகர்த்தி வருகிறார். ஆனால் மணியோ நாங்கள் இருவரும் காதலர்கள் தான் என்பதை ஒவ்வொரு நாளும் நிரூபித்து மொத்தமாக சொதப்பி கொண்டிருக்கிறார். அந்த வகையில் நேற்று நடைபெற்ற டாஸ்க்கில் ரவீனா மணிக்கு டிஸ்லைக் கொடுத்து, பிரதீப்புக்கு லைக் பேட்ச் கொடுத்திருந்தார்.
இதனால் காண்டான மணி தன் காதலியிடம் என்னை மற்றவர்கள் முன்பு விட்டுக் கொடுக்காதே என்று ஓவர் பொசசிவ்வில் பொங்கி பொங்கலாகி கொண்டிருந்தார். உடனே ரவீனா தன் நியாயத்தை கூறினாலும் அவர் ஏற்பதாக இல்லை. அதற்கு அடுத்தபடியாக ஸ்மால் பாஸ் வீட்டில் இருப்பவர்களுக்கு தனி யூனிபார்ம் கொடுக்கப்பட்டிருந்தது.
அதைப் பார்த்த ரவீனா பிரதீப்புக்கு இது நல்லா இருக்கு என்று கூறினார். அதே போன்று நிக்சன் வைத்திருக்கும் சிக்ஸ் பேக்கை காட்ட சொல்லி கேட்டார். இதையெல்லாம் பார்த்த மணி என்ன உனக்கு பிடிக்கவே மாட்டேங்குது, என்ன பாத்தா உனக்கு வெறுப்பா இருக்கான்னு அழாத குறையாக கேட்டார். இதையெல்லாம் பார்க்கும் போது கடுப்பாக தான் இருக்கிறது.
ஏனென்றால் விளையாட்டு தான் முக்கியம் என்று காதலை மூடி மறைத்து கேம் விளையாடும் ரவீனாவையும் மணி தொந்தரவு செய்து கொண்டிருக்கிறார். இதனால் இருவரும் ஜோடியாக வெளியில் போகும் வாய்ப்பு அதிகமாக இருக்கிறது. இப்படியாக மணி செய்யும் அட்டூழியம் வீட்டில் இருப்பவர்களையே கடுப்பாக்கி வருகிறது. அதனால் விரைவில் மக்கள் இவரை வீட்டை விட்டு துரத்தினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.