சனிக்கிழமை, டிசம்பர் 14, 2024

இருவரையும் தங்க தட்டில் தாங்கிய 2 தயாரிப்பாளர்கள்.. குதிரை பந்தயம் போல் மாற்றிய அஜித் விஜய்யின் பேராசை

Ajith and Leo: சினிமாவில் ஒரு நேரத்தில் திரையரங்குகளையும், விநியோகத்தர்களையும் தங்களது இரண்டு கண்களாக பார்த்தது இரண்டு தயாரிப்பு நிறுவனங்கள். ஆனால் இப்பொழுது வந்த புது புது தயாரிப்பு நிறுவனங்கள் எல்லாம் சினிமாவை கொழுத்த வியாபாரமாக பார்த்து வருகிறது.

இதற்கு ஒரு வகையில் முக்கியமான காரணம் நடிகர்கள்தான். சம்பளம் 100 கோடி 200 கோடி வாங்குகிறார்கள். இந்த பணமெல்லாம் கடைசியில் மக்கள் தலையில்தான் வந்து விழுகிறது. ஆரம்பத்தில் வளமான ஆரோக்கியமான பாதையில் போய்க் கொண்டிருந்த சினிமா இன்று கெட்டு சீரழிந்துள்ளது.

அப்படி ஆரம்ப காலகட்டத்தில் திரையரங்கு மற்றும் விநியோகஸ்தர்களை தங்கத்தட்டில் தாங்கியுள்ளது இரண்டு தயாரிப்பு நிறுவனம். ஏவிஎம் மற்றும் சத்தியஜோதி இந்த இரண்டு நிறுவனங்களும் மேலோங்கி இருக்கும் காலத்தில் அந்நிறுவனம் மற்றும் இன்றி ஒட்டு மொத்த பேரும் அவர்களுக்கு உண்டான லாபத்தை பெற்று வளர்ந்து வந்தனர். ஆனால் இன்று நிலைமை அப்படியே தலைகீழாக மாறி உள்ளது.

சத்தியஜோதி, ஏவிஎம் இந்த மாதிரி தயாரிப்பு நிறுவனங்கள் எல்லாம் இந்த படத்திற்கு இவ்வளவுதான் லாபம் என்று வரையறுக்கப்பட்டு தொழில் செய்யும் நிறுவனங்கள். துரதிஷ்டமாக அந்த படம் ஓடவிட்டால் அதே விநியோகஸ்தர்களுக்கு அடுத்த படத்தையும் கொடுத்து உதவுவார்கள்.

நடிகர்களின் பேராசையால் இப்பொழுது எல்லா பக்கமும் ஒப்பாரி மட்டுமே கேட்கிறது. இவர்கள் இப்படி செய்வதால் தயாரிப்பாளர்கள் தங்களுக்கும் அதிக லாபம் வேண்டும் என்பதற்காக தியேட்டர்களையும், விநியோகஸ்தர்களையும் தண்டிக்கின்றனர். கம்மியான சதவீதத்தில் பங்கு கொடுக்கின்றனர்.

இதனால் தியேட்டர்காரர்கள் லாபம் சம்பாதிப்பதற்காக படத்தின் இடைவெளியில் விற்கப்படும் தின்பண்டங்களுக்கு அதிக விலை நிர்ணயிக்கின்றனர். இந்த எல்லா பிரச்சனைக்கும் நடிகர்களுக்கு கொடுக்கப்படும் சம்பளம் தான் அடிப்படையான காரணமாக அமைகிறது.. எல்லாவற்றுக்கும் மேலாக இந்த ரசிகர்களும் மக்களும் தான் இதை புரிந்து கொண்டு செயல்பட வேண்டும்.

- Advertisement -

Trending News