இப்போது அந்த இளம் நடிகரின் தனிப்பட்ட விஷயம் தான் பரபரப்பை கிளப்பிக் கொண்டிருக்கிறது. ஆரம்பத்தில் சிறு பொறியாக தொடங்கிய இந்த விவகாரம் இப்போது காட்டு தீ போல் கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருக்கிறது. இதற்கு முக்கிய காரணம் நடிகர் ஆதாரத்தை அழிக்கிறேன் என்ற பெயரில் அடித்த கூத்து தான்.
அது மட்டுமல்லாமல் இந்த விஷயத்தில் சம்பந்தப்பட்ட இசை பிரபலத்தின் மனைவியும் தேவையில்லாமல் வந்து சிக்கிக்கொண்டார். இதற்கு விளக்கம் அளிக்கிறேன் என்ற பெயரில் நடிகருக்கு ஆதரவாக அவர் பேசியது ஒட்டுமொத்த சந்தேகத்தையும் உறுதிப்படுத்தும் விதமாக அமைந்துவிட்டது.
இதெல்லாம் ஒரு பக்கம் பூதாகரமாக வெடித்து வரும் நிலையில் நடிகர் வெளியில் தலை காட்ட முடியாத அளவுக்கு வீட்டிலேயே முடங்கி போயிருக்கிறாராம். சமீபத்தில் கூட அந்த தமாஷ் நடிகர் வீட்டில் ஒரு பங்க்ஷன் நடைபெற்றது. அதற்கு ஒட்டுமொத்த திரையுலகமும் திரண்டு வந்திருந்தது.
ஆனால் இந்த ஹீரோ மட்டும் எஸ்கேப் ஆகிவிட்டார். இத்தனைக்கும் தமாஷ் நடிகருக்கு இவர் நெருங்கிய நண்பர்தான். ஆனால் எங்கே அங்கு வந்தால் மீடியாவின் கண்ணில் சிக்கி விடுவோமோ தேவையில்லாத கேள்விகள் வருமோ என்ற பயத்தினால் அவர் நண்பன் வீட்டு விழாவுக்கு வரவில்லையாம்.
இப்படி அவர் பயந்து பயந்து முடங்கி இருப்பதற்கு ஒரு காரணமும் இருக்கிறது. அதாவது நடிகரின் லீலை குறித்த அத்தனை ஆதாரமும் இப்போது சில முக்கிய புள்ளிகளின் கைகளிலும் இருக்கிறது. அதாவது அண்ணன் மாதிரி நினைத்தவரின் மனைவியுடன் இவர் செய்த கூத்து அத்தனையும் பதிவாகி இருக்கிறதாம். அது ஆடியோ வடிவிலும், மெசேஜ் வடிவிலும், சில வீடியோ ஆதாரங்களும் கூட இருக்கிறது.
அதிலும் அவர்கள் இருவரும் தனிப்பட்ட முறையில் பேசிய வாய்ஸ் மெசேஜ் கேட்கும்போதே அவ்வளவு மோசமாக காது கூசும் வகையில் உள்ளதாம். ஆனால் நடிகரை மட்டும் இதில் குறை சொல்ல முடியாது. ஏனென்றால் ஊசி இடம் கொடுக்காமல் நூல் நுழையாது. அந்த வகையில் எதிர் தரப்பிலிருந்து சிக்னல் வந்ததாலேயே இவர் தடுமாறி விட்டதாக அதிர்ச்சி தகவல்கள் இப்போது பரவிக் கொண்டிருக்கிறது.