விஜய்க்கு பைரவா படத்தில் இருந்து ஒரு பிரச்சனை சுற்றிக் கொண்டிருக்கிறது. அதாவது அவருடைய ஹேர் ஸ்டைல் ஒவ்வொரு படத்திற்கும் மாறி கொண்டிருப்பதால் அவர் விக் வைத்துள்ளார் என்ற விமர்சனங்கள் எழுந்து இருந்தது. இது உண்மைதானோ என்று பலரும் நினைக்கும் படியாக ஹேர் ஸ்டைல் மாறிக்கொண்டே இருந்தது.
அதாவது படத்தில் நடிக்கும் போது ஒரு ஹேர் ஸ்டைலும் வெளியே வந்தால் வேறு மாதிரி என நாளுக்கு நாள் விஜய்யின் ஹேர் ஸ்டைல் மாறுகிறதால் விக் வைத்துள்ளார் என பலரும் உறுதி செய்தனர். மேலும் லியோ படத்தில் ஒரு ஹேர் ஸ்டைல் வைத்திருந்த நிலையில் இப்போது சமீபத்தில் தளபதி 68 படத்திற்கான பூஜை போடப்பட்டது.
இதில் வேறு ஒரு கெட்டப்பில் இருந்திருந்தார். இதை ட்ரோல் செய்யும் விதமாக வீடியோக்கள் வெளியாகி இருந்தது. இந்நிலையில் விஜய்யின் ஹேர் ஸ்டைலிஸ்ட் தேவ் சக்திவேல் சமீபத்தில் ஊடகம் ஒன்றுக்கு பேட்டி கொடுத்திருந்தார். தளபதிக்கு இப்போது கிட்டத்தட்ட 50 வயதை நெருங்கி விட்டது.
ஆனால் தற்போது வரை விஜய் தனது முடியை பாதுகாத்து வருகிறார் என தேவ் கூறி இருக்கிறார். மேலும் விஜய்க்கு தற்போது வரை விக் கட் செய்யவில்லை என்று கூறியுள்ளார். இதுவரை விஜய் விக் வைத்து தான் சுற்றித் திரிகிறார் என்று பலரும் கூறி வந்த நிலையில் அந்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக ஹேர் ஸ்டைலிஷ் தேவ் சக்திவேல் இதை கூறியிருக்கிறார்.
மேலும் அவர் பேசிய வீடியோவை இப்போது விஜய் ரசிகர்கள் அதிகமாக இணையத்தில் ஷேர் செய்து வருகிறார்கள். ஆனாலும் சிலர் இதை நம்பாமல் வேண்டுமென்றே பொய் சொல்லி வருகிறார் இப்போது விஜய் வீக் வைக்கவில்லை என்றும் ஹேர் டிரான்ஸ்பர்மேஷன் செய்துள்ளார் என விமர்சித்து வருகிறார்கள்.
ஆனால் முன்பு இருந்ததை விட இப்போது விஜய் தனக்கு தகுந்தார் போல ஹேர் ஸ்டைலை வைத்துள்ளது அவரது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. சமீபத்தில் தளபதி 68 படத்திற்கான படப்பிடிப்பு தொடங்கிய நிலையில் இப்போது மும்மரமாக நடந்து கொண்டிருக்கிறது. இந்த படத்தைப் பற்றிய அப்டேட்டுகள் அடுத்தடுத்து வெளியாக வாய்ப்பிருக்கிறது.