மாஸ் ஹீரோவின் வீட்டு பஞ்சாயத்து தான் இப்போது அதிர்ச்சியை கிளப்பிக் கொண்டிருக்கிறது. ஏற்கனவே மனைவியுடன் பிரச்சனை, பிள்ளைகள் பேசுவதில்லை என செய்திகள் ஒரு பக்கம் பூதாகரமாக வெடித்து வரும் நிலையில் தற்போது வெளிவந்துள்ள படமும் எரிகிற நெருப்பில் எண்ணெயை ஊற்றி இருக்கிறதாம்.
இதற்கு முக்கிய காரணம் இப்போது ரீ என்ட்ரியில் கலக்கி கொண்டிருக்கும் அம்மணி தான். பல வருடங்களுக்கு முன்பே மாஸ் ஹீரோவுடன் அடுத்தடுத்த படங்களில் ஜோடி போட்டு ஒரு நெருக்கத்தை இவர் உருவாக்கி இருந்தார். அது மட்டுமின்றி அவர் முன்னணி அந்தஸ்துக்கு வந்ததற்கு காரணமே இதுதான் என்று கூட சலசலக்கப்பட்டது.
ஆனால் இது அப்போதே நடிகரின் மனைவிக்கு கடுப்பை வரவழைத்த நிலையில் அவ பக்கமே தலை வைத்து படுக்கக் கூடாது என கணவரிடம் ஸ்ட்ரிக்டாக சொல்லி இருக்கிறார். அதைத்தொடர்ந்து அனைத்து விஷயங்களையும் மூட்டை கட்டி விட்டு நம்பர் ஒன் நடிகரை ஓரம் கட்டும் முயற்சியில் அந்த ஹீரோ இறங்கி வேலை பார்த்தார்.
இப்படி நன்றாக சென்று கொண்டிருந்த வாழ்க்கையில் மீண்டும் நடிகையின் தலையீடு பிரச்சனையை கிளப்பி இருக்கிறது. சமீபத்தில் வெளிவந்த படத்தில் அம்மணி நடிக்கிறார் என்றதுமே பல மீடியாக்கள் விஷயத்தை அலசி ஆராய்ந்து கொளுத்தி போட்டனர். அதைத்தொடர்ந்து இப்போது படத்தில் இருக்கும் அந்த ரொமான்டிக் காட்சியும் நடிகரின் வீட்டில் புயலை கிளப்பி இருக்கிறது.
ஏனென்றால் அது வேண்டுமென்றே நடிகரின் கட்டாயத்தினால் திணிக்கப்பட்டது என்ற ஒரு பேச்சு இப்போது அதிர்ச்சியை கிளப்பிக் கொண்டிருக்கிறது. படத்தை பார்த்த நடிகரின் குடும்பமும் இப்போது அவரை லெப்ட் அண்ட் ரைட் வாங்கி வருகிறதாம். இப்படி பழைய குருடி கதவைத் திறடி என்ற கதையாக நடிகையால் நடிகையின் வாழ்வில் புது பூகம்பம் வெடித்துள்ளது.
இதைத்தான் இப்போது கோலிவுட் வட்டாரத்தில் பரபரப்புடன் பேசி வருகின்றனர். ஆனால் பிரச்சனைக்கு காரணமான அம்மணியோ இப்போது கை நிறைய படங்களை பிடிக்கும் முயற்சியில் இறங்கி விட்டாராம். ஏற்கனவே டாப் ஹீரோ படத்தில் கமிட் ஆகி இருக்கும் அவர் உச்ச நடிகர் படத்திலும் நடிப்பதற்கான முயற்சியில் இருப்பதாக கிசுகிசுக்கப்பட்டு வருகிறது.