திங்கட்கிழமை, நவம்பர் 25, 2024

லியோ சந்தித்த பஞ்சாயத்துகள்.. கழுவி ஊத்தினாலும் வசூல் நாங்கதான், உருட்டும் படக்குழு?

Leo movie: கடந்த 19ஆம் தேதி ரிலீசான லியோ படம் தாறுமாறாக வசூலை அள்ளுகிறது என சோசியல் மீடியாவில் கிளப்பி விடுகின்றனர். ஆனால் மறுபுறம் இந்த படம் எதிர்பார்த்த அளவு இல்லை என்று கழுவி கழுவி ஊற்றுகின்றனர். லியோ ரிலீஸ் ஆகுவதற்கு முன்பு நிறைய பிரச்சனைகள் வெடித்தது.

அதையெல்லாம் சரி செய்து ஒரு வழியாய் படத்தை ரிலீஸ் செய்தனர். ஆனால் ரிலீசான பின்பும் நாலா பக்கமும் இந்த படத்திற்கு அடுக்கடுக்காய் பிரச்சனைகள் குவிகிறது. வெளிநாடுகளில் லியோ படத்தின் ஐமேக்ஸ் நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டன.

ப்ராக்ஸி டிக்கெட் முன்பதிவு ஒதுக்கீடு, உலகக் கோப்பை கிரிக்கெட் சீசன், கர்நாடகாவில் காவேரி பிரச்சனை, கோஸ்ட் படம் ரிலீஸ் என இவையெல்லாம் லியோ படத்தின் வசூலுக்கு பங்கம் விளைவித்தது. இதோடு தெலுங்கில் இரண்டு பெரிய படங்களும் ரிலீஸ் ஆனது.

வட இந்தியாவில் லியோ

மேலும் வட இந்தியாவில் மல்டிபிளக்ஸ் லியோ படத்தை வெளியிட தடை விதிக்கப்பட்டது. தமிழகத்தில் லியோ படத்தின் ஆடியோ லான்ச் நிகழ்ச்சியை ரத்து செய்தனர்.  இந்த படம் ரிலீஸ் ஆனபோது ஸ்பெஷல் ஷோ கிடையாது, அதிகாலை காட்சி ரத்து செய்யப்பட்டது என்றும் ஷோ டைமில் ஏகப்பட்ட குளறுபடி செய்தனர்.

அதன் தொடர்ச்சியாக மழைக்காலம், அதீத எதிர்மறை விமர்சனங்கள், வசூல் பற்றிய போலிப் பிரச்சாரம் என இப்படி லியோ படம் ரிலீஸ் ஆன பின்பும் நிறைய பஞ்சாயத்தை சந்தித்தது. அப்படி இருந்தும் இன்னும் அவர்களால் விஜய்யின் வெற்றியை தடுக்க முடியவில்லை.

லியோ அனைத்து ஏரியாக்களும் 11 நாட்களில் லாப மண்டலத்திற்குள் நுழைந்தது என்றும் பட குழு ஒரு புறம் பெரிய உருட்ட உருட்டுகிறது. ‘என்னதான் விழுந்து புரண்டாலும் ஒட்டுற மண்ணு தான் ஒட்டும்’ என்பதை லியோ பட குழு மறந்திட கூடாது.

- Advertisement -spot_img

Trending News