வெள்ளிக்கிழமை, டிசம்பர் 27, 2024

அஜித் ஆரம்பிக்கும் மருத்துவ முகாம்.. விடாமுயற்சியில் ஒரு புது முயற்சி

Ajith-vidaamuyarchi: அஜித்தின் விடாமுயற்சி படம் தொடங்குவதற்குள் முன்பே ஏகப்பட்ட சிக்கலை சந்திக்க நேரிட்டு வருகிறது. அந்த வகையில் ஆரம்பத்தில் விக்னேஷ் சிவன் இந்த படத்தில் இயக்குவதாக ஒப்பந்தமான நிலையில் லைக்கா அவரை தூக்கிவிட்டு மகிழ் திருமேனியை வைத்து படத்தை தொடங்கியது. நீண்ட மாதங்களாக இந்த படத்தின் படப்பிடிப்பு எப்போது தொடங்கும் என ரசிகர்கள் காத்துக் கொண்டு இருந்த நிலையில் சமீபத்தில் தான் தொடங்கப்பட்டது.

இந்த சூழலில் திடீரென விடாமுயற்சி படக்குழுவில் உள்ள ஒருவரின் மரணம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. இந்த படத்தில் கலை இயக்குனராக பணியாற்றி வந்த நிலன் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். இதை விடாமுயற்சி படக்குழு மட்டுமின்றி தமிழ் சினிமாவிலும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இனி இதுபோன்று எந்த உயிரும் இழக்கக்கூடாது என்பதற்காக அஜித் ஒரு முடிவு எடுத்திருக்கிறார்.

விடாமுயற்சி படக்குழுவில் பணியாற்றி வரும் அனைத்து தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் மருத்துவ பரிசோதனை சிறப்பு முகாம் ஏற்பாடு செய்துள்ளனர். அஜித்தின் அறிவுறுத்தல்படி தான் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது. அதாவது தன்னுடைய உடல் நலத்தை கருத்தில் கொள்ளாமல் கடினமாக உழைக்கும் போது இவ்வாறு சில அசம்பாவிதங்கள் நடைபெறுகிறது.

Also Read : விஜய்க்கு ஸ்பீடு பிரேக் போட்டே ஆகணும் அதிரடியாக முடிவெடுத்த அஜித்.. நீ படிச்ச ஸ்கூல்ல நா ஹெட் மாஸ்டர் டா!

சினிமாவில் பெரிய நட்சத்திரங்களில் திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழக்கும் செய்தி அடிக்கடி வெளியாகி வருகிறது. சமீபத்தில் கூட எதிர்நீச்சல் தொடரில் குணசேகரனாக நடித்த மாரிமுத்து மாரடைப்பால் உயிரிழந்த செய்தி ரசிகர்களை அதிர்ச்சியில் உள்ளாக்கி இருந்தது. இவ்வாறு சினிமா பிரபலங்கள் சிலர் தங்களது உடல்நலத்தில் அக்கறை இல்லாமல் நடந்து கொள்கிறார்கள்.

ஆகையால் இனி விடாமுயற்சி படக்குழு தரப்பிலிருந்து எந்த ஒரு உயிரும் போய் விடக்கூடாது என்ற முன்னெச்சரிக்கையில் இப்போது சிறப்பு முகாம் நடைபெற இருக்கிறது. இவ்வாறு தன்னுடைய படத்தில் பணியாற்றும் ஊழியர்களுக்கு சிறப்பு மருத்துவ சிகிச்சை மற்ற நடிகர்கள் ஏற்பாடு செய்வார்களா என்பது சந்தேகம் தான்.

எப்போதுமே தன்னை சுற்றி உள்ளவர்கள் மற்றும் ரசிகர்கள் மீது அதீத அக்கறை கொண்டிருக்கும் அஜித் இப்போது விடாமுயற்சி படக்குழுவுக்காக இவ்வாறு செய்துள்ளது ரசிகர்களிடமிருந்து பாராட்டைப் பெற்றிருக்கிறது. மேலும் என்ன மனுஷன் இவரு என ரசிகர்களை உச்சிக் குளிரும் படியாக சம்பவங்களை அஜித் தொடர்ந்து செய்து வருகிறார்.

Also Read : குவாரியில் பணம் கொட்டுவதால் பெரிய முதலைக்கு அஜித் போட்ட கொக்கி.. மனசு கோணாமல் நடக்கும் தயாரிப்பாளர்

Trending News