தங்கலான் பட மொத்த கதையும் இதுதான்.. விக்ரம் மீது செம அப்செட்டில் பா. ரஞ்சித்

Thangalaan Movie Story: பா ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடித்துக் கொண்டிருக்கும் தங்கலான் படத்தின் டீசர் இன்று வெளியிடப்பட்டது. அப்போது விக்ரம் பேசிய பேச்சால் இப்போது படத்தின் இயக்குனர் பா. ரஞ்சித் செம அப்செட்டில் இருக்கிறார் .

ஏனென்றால் தங்கலான் படத்தின் மொத்த கதையையும் விக்ரம் சொல்லிவிட்டார். இதனால் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களின் மத்தியில் குறைந்து விடும் என்ற பதட்டத்தில் பட குழு இருக்கின்றனர். சமீபத்தில் விக்ரமின் பிறந்த நாளை முன்னிட்டு தங்கலான் படத்தின் மேக்கிங் வீடியோ வெளியானது.

இந்த வீடியோவை பார்க்கும் போதே இதில் அவர் உயிரைக் கொடுத்து நடித்திருக்கிறார் என்பது தெரிந்தது. ஆனால் தங்கலான் படத்தின் டீசர் வெளியீட்டு விழாவில் விக்ரம் கொடுத்த ஹிண்ட் படத்தின் முழு கதையையும் தெரிந்து கொள்ள வைத்திருக்கிறது. அடிமைத்தனம் எல்லா பக்கமும் இருக்கிறது.

அந்த அடிமைத்தனத்தை மறைக்கத்தான் இந்த உலகில் ஆளும் வர்க்கத்தினர் போராடுகின்றனர். நமக்குத் தெரிந்தது ஆங்கிலேயர் பண்ணிய அடிமைத்தனம் தான். ஆனால் ஆரம்பத்தில் இந்த சமுதாயம் இருந்த கதை என்ன என்பதை இந்த படத்தில் காட்டி இருக்கின்றனர். ஏனென்றால் சில விஷயங்களை நாம் போக போக மறந்து விடுகிறோம்.

இப்போது இருக்கும் தலைமுறைகளுக்கு அது தெரியுமா என்று கூட தெரியவில்லை என்று படத்தின் கதையைக் குறித்து சீயான் விக்ரம் வெளிப்படையாக பேசினார். அது மட்டுமல்ல தங்கலான் படத்திற்காக டப்பிங் இல்லாமல் லைவாக சிரமப்பட்டு பேசினாராம்.

மேலும் இந்த படத்தின் படப்பிடிப்பின் போது நோ ஃபோன், நோ சாப்பாடு, நோ கேரவன், நோ சேர், சுட்டெரிக்கும் வெயில் என படப்பிடிப்பே வித்தியாசமாக இருந்தது. செருப்பு கூட போடாமல் கல்லு முள்ளை எல்லாம் பார்க்காமல் நடந்து சென்றோம் என்று இந்த படத்தின் அனுபவத்தை பற்றியும் விக்ரம் பேசினார். கடைசியாக வெள்ளக்காரர்களின் பேராசை அவர்கள் அழிவுக்கு காரணம் என்றும் குறிப்பிட்டார்.