புதன்கிழமை, ஜனவரி 15, 2025

சிவாங்கியை சுற்றி வளைத்த காதல் சர்ச்சை.. இணையதளத்தில் வைரலாகும் புகைப்படம்

Sivangi Krish Love Controversey: விஜய் தொலைக்காட்சியின் பிரபலமான சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் போட்டியாளராக அறிமுகமானார் சிவாங்கி. பிரபல பின்னணி பாடகி பின்னி கிருஷ்ணகுமாரின் மகளாக இருந்தாலும் போட்டியில் கடைசி வரை வர முடியாமல் வெளியேற்றப்பட்டார். அதன் பின்னர் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சிவாங்கி மிகப்பெரிய அளவில் புகழ் பெற்றார்.

சிவாங்கி, குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது நடிகர் அஸ்வின் மீது தனக்கு கிரஷ் இருப்பதாக ஒவ்வொரு எபிசோடிலும் சொல்லி வந்தார். இந்த ஜோடிக்கு சமூக வலைத்தளத்தில் ரசிகர்கள் அதிகமாக இருந்தார்கள். சிவாங்கிக்கு இந்த நிகழ்ச்சிக்கு பிறகு நிறைய வாய்ப்புகள் கிடைக்க ஆரம்பித்ததால் அஸ்வின் டிராக்கை அப்படியே முடித்துக் கொண்டார்.

Also Read:விஜய் டிவிக்கு பெரிய கும்பிடு போட்ட குடும்ப குத்துவிளக்கு.. வாங்குன அடி அப்படி

சிவகார்த்திகேயன் தன்னுடைய டான் படத்தின் மூலம் சிவாங்கிக்கு பட வாய்ப்பு கொடுத்தார். அதன் பின்னர் சிவாங்கிக்கு தற்போது நிறைய வாய்ப்புகள் கிடைக்க ஆரம்பித்திருக்கிறது. வெளிநாட்டு ஷோக்களில் கலந்து கொள்ளுவதோடு, ஆல்பம் சாங் பாடுவதிலும் ஆர்வம் காட்டி வருகிறார். அடிக்கடி விஜய் டிவியின் நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்கிறார்.

சிவாங்கியை பற்றி தற்போது மீண்டும் ஒரு சர்ச்சை செய்தி வெளியாகி இருக்கிறது. சிவாங்கி இசையமைப்பாளர் வித்யாசாகரின் மகன் ஹர்ஷவர்தன் உடன் இணைந்து பாடல் ஆல்பங்களை வெளியிட்டு வருகிறார். சூப்பர் சிங்கரில் கலந்து கொண்ட பிரியங்கா,மானசி போன்றவர்களுடன் இணைந்து ஹர்ஷவர்தன் ஆல்பம் சாங் இதற்கு முன்பு பண்ணியிருந்தாலும், சிவாங்கி உடன் அதிக நெருக்கம் காட்டி வருவதாக சொல்லப்படுகிறது.

விஜய் மற்றும் திரிஷா நடிப்பில் வெளியான குருவி படத்தில் வரும் தேன் தேன் என்னும் பாடலை வைத்து இவர்கள் சமீபத்தில், ஆல்பம் சாங் பண்ணி இருந்தார்கள். இந்த வீடியோவில் இருவருமே அதிக நெருக்கமாக இணைந்து நடித்திருந்தார்கள். அந்த ஆல்பம் சம்பந்தப்பட்ட ரொமாண்டிக் புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

சிவாங்கி, ஹர்ஷவர்தன்

Sivangi krish
Sivangi krish

சிவாங்கி, ஹர்ஷவர்தன் இருவரும் காதலிப்பதாக நெட்டிசன்கள் கமெண்ட் செய்து வருகிறார்கள். ஏற்கனவே சிவாங்கி இப்படித்தான் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது, நடிகர் அஸ்வினுடன் கிசுகிசுக்கப்பட்டார். அதேபோன்று இப்போது மீண்டும் ஒரு சர்ச்சை அவரைப் பற்றி வெளியாகி இருக்கிறது. இதற்கு சிவாங்கி தரப்பு தான் விளக்கம் கொடுக்க வேண்டும்.

Also Read:நினைப்பு தான் பொழப்பை கெடுக்கும்.. புது திட்டம் போட்டு பகல் கனவு காணும் பிக்பாஸ் விஷ பாட்டில்கள்

Trending News