திங்கட்கிழமை, ஜனவரி 13, 2025

மீண்டும் துளிர்விட்ட ஹீரோவின் பழைய காதல்.. வாழ்க்கை பறிபோய் விடுமோ என்ற பயத்தில் மனைவி

வாரிசு நடிகராக சினிமாவில் நுழைந்த ஹீரோ முதல் படத்திலேயே தன்னுடைய அபரிவிதமான நடிப்பால் ஒட்டுமொத்த ரசிகர்களையும் கவர்ந்து விட்டார். அதன் பிறகு நடிகர் அவருக்கு ஏற்றார் போல் கதைகளை தேர்ந்தெடுத்து நடிக்க ஆரம்பித்தார். அந்த சமயத்தில் தான் அக்கடதேசத்தில் இருந்து நடிகை ஒருவர் என்ட்ரி கொடுத்திருந்தார்.

மேலும் இவர்கள் முதல்முறையாக ஒன்றாக நடிக்கும் போதே கிசுகிசுக்கள் வெளியாகி இருந்தது. அதோடு மட்டுமல்லாமல் ஹீரோ அந்த நடிகை தான் வேண்டும் என்று தன்னுடைய அடுத்தடுத்த படங்களிலும் ஹீரோ புக் செய்து விட்டார். வாய்ப்பு வாங்கி தந்ததால் நடிகை ஹீரோவின் வலையில் விழுந்து விட்டார்.

இவர்களது காதல் விவகாரம் காட்டு தீ போல் நாலா பக்கமும் பரவி விட்டது. செய்தித்தாள்களிலும் இந்த கிசுகிசு வெளியான நிலையில் ஹீரோவின் அப்பா காதுக்கும் சென்றது. காதல் என்று சொன்னாலே காதை போத்திக் கொள்ளும் அப்பா நடிகரின் காதலையும் ரிஜெக்ட் செய்து விட்டார். எவ்வளவோ கேட்டு பார்த்தும் செவி சாய்க்கவில்லை.

இதற்கு மேலும் ஹீரோவை சும்மா விட்டால் சரிப்பட்டு வராது என உடனடியாகவே ஒரு குடும்பப் பெண்ணாக பார்த்து அப்பா கால் கட்டு போட்டு விட்டார். வேறு வழியில்லாமல் அப்பா பேச்சை கேட்டு திருமணம் செய்து கொண்ட ஹீரோ குடும்பம், குட்டி என சந்தோஷமாக வாழ்ந்து வந்தார். இப்போது இவரின் வாழ்க்கையில் புயல் காற்று வீச தொடங்கி இருக்கிறது.

அதாவது சமீபத்தில் நடிகரின் படத்திற்காக ஒரு பிரம்மாண்ட விழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் சினிமாவில் உள்ள முக்கிய பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டிருந்தனர். அந்த வகையில் நடிகரின் முன்னாள் காதலி இப்போது ட்ரெண்டிங்கில் உள்ளதால் அவரையும் இந்த நிகழ்ச்சிக்கு படக்குழுவினர் அழைத்து இருந்தனர்.

பழைய காதலைப் பார்த்ததும் ஹீரோவுக்கு துளிர் விட்டு போக நடிகையுடன் குத்தாட்டம் போட்டிருக்கிறார். இந்த வீடியோ தான் இப்போது இணையத்தில் வைரலாகி பரவிக் கொண்டிருக்கிறது. மேலும் ஹீரோவின் மனைவியோ இப்போது மீண்டும் இவர்கள் ஒன்று சேர்ந்ததால் தன்னுடைய வாழ்க்கை பறிபோய் விடுமோ என்ற பயத்தில் இருக்கிறார்.

Trending News