வியாழக்கிழமை, ஜனவரி 16, 2025

ரொமான்ஸில் பட்டையைக் கிளப்ப ரெடியான நயன்.. எல்லாம் முடிஞ்சு, இனிமே பணம் மட்டும்தான் டார்கெட்

Actress Nayanthara: நடிகை நயன்தாரா கிட்டத்தட்ட 18 வருடங்களுக்கு மேலாக சினிமாவில் இருக்கிறார். ஆரம்பத்தில் கிடைக்கும் வாய்ப்புகளை எல்லாம் பயன்படுத்திக் கொண்டாலும், அதன் பின்னர் தனக்கென சில விதிகளை விதித்து கொண்டு தான் படங்களில் நடித்தார். தற்போது சம்பளத்திற்காக தன்னுடைய மொத்த கொள்கையையும் தளர்த்தி இருக்கிறார்.

நயன்தாராவிற்கு திருமணத்திற்கு பிறகு பெரிய ஹீரோக்களின் பட வாய்ப்பு கிடைக்கவில்லை. அடுத்தடுத்து விஜய் மற்றும் அஜித்தின் படங்கள் ரெடியான போது கூட நயன்தாராவுக்கு வாய்ப்பு கிடைக்காமல் போனது. வேறு வழி இல்லாமல் தற்போது அன்னபூரணி மற்றும் டெஸ்ட் போன்ற படங்களில் நடித்து வருகிறார். திண்ணையில் இருந்தவனுக்கு அடித்ததாம் அதிர்ஷ்டம் என்பது போல் நயன்தாராவுக்கு தமிழில் பெரிய வாய்ப்பு கிடைத்திருக்கிறது.

கிட்டத்தட்ட 33 வருடங்களுக்கு பிறகு இணையும் மணிரத்னம், கமலஹாசன் கூட்டணியில் நயன்தாரா இணைந்து இருக்கிறார். கமலின் 234 வது படத்தில் நயன்தாராவை நடிக்க வைக்க பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகிறது. ஏற்கனவே கமல் நயன்தாராவை தன்னுடன் நடிக்க வைக்க நிறைய முயற்சிகள் செய்தும் அவர் டிமிக்கி கொடுத்து வந்தார். தற்போது இந்த படத்திற்கு ஓகே சொல்லி இருக்கிறார்.

கமலஹாசன் நடிக்கும் படங்களில் முத்த காட்சிக்கு எப்போதுமே குறைவிருக்காது. அதிலும் மணிரத்தினம் படம் என்றால் சொல்லவா வேண்டும். இது எல்லாம் தெரிந்தும் நயன்தாரா இந்த கூட்டணியில் நடிப்பதற்கு சம்மதம் சொல்லி இருக்கிறார். அதான் திருமணம் ஆகிவிட்டதே, இனி எப்படி நடித்தால் என்ன என நயன்தாரா முடிவு செய்து இருப்பது போல் தெரிகிறது.

நயன்தாராவுக்கு இந்த படத்தில் சம்பளம் அதிகமாக பேசப்பட்டிருப்பது ஒரு காரணம் என சொல்லப்படுகிறது. இந்த படத்திற்காக 40 கோடி வரை அவருக்கு சம்பளம் பேசப்பட்டிருக்கிறதாம். விஜய் மற்றும் அஜித் திரிஷாவை ஓகே செய்து நயன்தாராவை புறக்கணித்து வந்த நிலையில், கமலஹாசன் படத்தின் மூலம் கெத்தாக என்ட்ரி கொடுக்கிறார் நயன்.

நயன்தாராவுக்கு தற்போது அவ்வளவாக மார்க்கெட் இல்லை. இதனால் தான் வரும் வாய்ப்புகளை எல்லாம் பயன்படுத்திக் கொள்வோம் என முடிவெடுத்து விட்டார். அதிலும் கமல் அவரே வாய்ப்பு கொடுத்து, கோடிக்கணக்கில் காசையும் கொடுக்கிறார் என்றால் கேட்கவா வேண்டும். இதனால் எப்படிப்பட்ட காட்சியிலும் நடிக்க தயாராகி விட்டார் நயன்.

Trending News