வியாழக்கிழமை, ஜனவரி 9, 2025

வாரிசு நடிகையை வேட்டையாடிய 68 வயது நடிகர்.. நேரில் சென்று வெளுத்து வாங்கிய மனைவி

Gossip News: நடிப்பில் சகலகலா வல்லவன் ஆக இருந்த அந்த நடிகர், பெண்கள் விஷயத்திலும் பேர் போனவர். நடிகர் வேட்டையாடாத இடங்களே இல்லை என்று சொல்லலாம். வெளியில் பெரிய மனுஷன் வேஷம் போட்டாலும், உள்ளே நடக்கும் அத்தனை அந்தரங்க கதைகளும் பொதுவெளியில் வெளிச்சம் தான். நடிகரும் இதை வெளியில் சொல்ல கூச்ச பட்டதே கிடையாது.

ஒன்னுக்கு ரெண்டு என கல்யாணம் பண்ணி அந்த வாழ்க்கையும் நடிகருக்கு செட் ஆகவில்லை. திருமண வாழ்க்கையே வேண்டாம் என்று ஒதுங்கிய நடிகர், கிடைச்ச கேப்பில் எல்லாம் காதல் வாழ்க்கை நடத்த தவறியதே இல்லை. அப்படித்தான் வாரிசு நடிகை ஒருவரை வளைத்து போட்டு, மனைவியிடம் கையும் களவுமாக மாட்டியிருக்கிறார்.

சினிமாவில் எப்படியாவது ஜெயித்து விட வேண்டும் என்று நினைத்த அந்த வாரிசு நடிகைக்கு முதலில் வாய்ப்பு கொடுப்பது போல் தான் நெருங்கி இருக்கிறார் இந்த முத்த நடிகர். படத்தின் கதை எல்லாம் ஓகே ஆகி, நடிகைக்கு ஒப்பந்தமும் போடப்பட்டு, சம்பளமும் கொடுக்கப்பட்டு விட்டது. படப்பிடிப்பு மட்டும்தான் பாக்கி இருந்திருக்கிறது.

சினிமாவில் வாய்ப்பு கொடுத்து, நடிகையிடம் மற்ற டீலையும் பேசி முடித்து விட்டார் இந்த நடிகர். வாரிசு நடிகையும், நடிகரும் சென்னையில் உள்ள ஒரு பிரபல ஹோட்டலில் தங்கி இருந்து இருக்கிறார்கள். இந்த விஷயம் எப்படியோ நடிகரின் மனைவியின் காதுக்கு சென்று இருக்கிறது. இருவரையும் கையும் களவுமாக பிடிக்க நடிகரின் மனைவி அந்த ஹோட்டலுக்கு சென்று விட்டார்.

இருவரையும் ஹோட்டல் வராண்டாவில் வைத்து திட்டி தீர்த்து இருக்கிறார் முத்த நடிகரின் மனைவி. இதை அந்த ஒட்டுமொத்த ஹோட்டலில் இருந்தவர்களும் பார்த்துக் கொண்டே இருந்திருக்கிறார்கள். நடிகர் அப்போது வளர்ந்து வந்த காலகட்டம் என்பதால் பெரிதாக பேசப்படவில்லை. ஆனாலும், இத்தனை வருடம் கழித்தும் முத்த நடிகர், அந்த வாரிசு நடிகையுடன் உறவில் இருந்தது எல்லோராலும் பேசப்படுகிறது.

சினிமா ஆசையை காட்டி வாரிசு நடிகையை சோலி முடித்து விட்டார் அந்த முத்த நடிகர். மனைவி போட்ட போடில் நடிகையை ஒப்பந்தம் செய்திருந்த படத்திலிருந்து நீக்கிவிட்டாராம். இருந்தாலும் முத்த நடிகரின் காதல் லீலை நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டே போக இனி வேலைக்கு ஆகாது என, மனைவியும் விவாகரத்து கொடுத்துவிட்டு பறந்து விட்டார்.

Trending News